மேற்கு வங்க மக்களுக்கு நன்மை ஏற்படுமானால், பிரதமரின் ஆகங்காரம் தனிய அவரின் காலிலும் விழத்தயார் என மேற்கு வங்க முதலமைச்சர் மதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
யாஸ் புயலால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ய நடைபெற்ற கூட்டம் தொடர்பாக ’போலியான, ஒருதலைபட்சமான செய்திகள்’ வெளியிடப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மம்தா, ”என்னை இப்படி அவமதிக்காதீர்கள். எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது, அதனால் தான் நீங்கள் இப்படி நடந்து கொண்டிருக்கிறீர்களா?. நீங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்து தோற்று போனீர்கள். நீங்கள் ஏன் தினமும் எங்களுடன் சண்டையிடுகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.
“சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட நான் திட்டமிட்டிருந்தேன். யாஸ் புயலால் ஏற்பட்ட சேதத்தைக் காண நான் சாகர் மற்றும் திகா பகுதிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. என் திட்டங்கள் அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்டு, தயாராக இருந்தன. பின்னர் திடீரென்று புயலுக்குப் பிறகான நிலைமையை மதிப்பிடப் பிரதமர் மேற்கு வங்கத்திற்கு வருகை தர விரும்புகிறார் என்று எங்களுக்கு அழைப்பு வந்தது” என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
”கூட்டம் நடைபெற இருப்பதாக சொன்ன இடத்தை அடைந்தபோது, அப்போது பிரமதர் ஒரு கூட்டத்தில் இருப்பதால் அனுமதி இல்லை என காத்திருக்க வைக்கப் பட்டோம். ஒரு மணிநேர காத்திருப்பிற்கு பிறகு, ஆலோசனை கூட்டத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டோம்” என மம்தா தெரிவித்தார்.
’தடுப்பூசிகள் காணாமல் போனது குறித்து முறையான விசாரணை வேண்டும்’ – ப. சிதம்பரம் வலியுறுத்தல்
”அங்குச் சென்று பார்த்தபோது, மரியாதைக்குரிய ஆளுநர், பாஜகவின் தேசிய தலைவர்கள் மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றிருந்ததை பார்த்தோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
“பிரதமர்-முதல்வர் கூட்டம் மட்டுமே என்று கருதப்பட்டது. எனவே, எங்கள் அறிக்கையைப் பிரதமரிடம் சமர்ப்பிக்க முடிவு செய்தோம், பின்னர் பிரதமரின் அனுமதியுடன் நாங்கள் திகாவுக்குச் சென்றோம். நான் மூன்று முறை பிரதமரின் அனுமதியைக் கோரினேன்” என அவர் கூறியுள்ளார்.
காவல்துறையின் நடவடிக்கையால் பேரறிவாளனை சூழும் அபாயம் – வழக்கறிஞர் பிரபு
மேற்கு வங்க மக்களுக்கு நன்மை விளையுமானால் பிரதமரின் காலையும் தொடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, ”தலைமைச் செயலாளரை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். மேலும், இது நாடு முழுவதும் உள்ள அதிகார வர்கத்தினரை அவமதிப்பதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.