Aran Sei

இந்த ரோஜாப்பூவை வைத்து என்ன செய்வது? – ஒன்றிய அரசை விலாசிய உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர் ஒருவர், “எங்களை வரவேற்க ரோஜாப் பூவை கொடுத்தார்கள். இந்த ரோஜாப் பூவை வைத்து நான் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை அந்தந்த அரசுகள் மீட்டு வருகின்றன. இந்தியாவும் உக்ரைனில் படிக்கச் சென்ற மாணவர்களை மீட்டு வருகிறது. உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் “எங்களை வரவேற்க ரோஜாப் பூவை கொடுத்தார்கள். இந்த ரோஜாப் பூவை வைத்து நான் என்ன செய்வது, இதற்கு மாறாக அமெரிக்காவைப் போல் எங்களை மிக முன்கூட்டியே எச்சரித்து வெளியேற்றியிருந்தால் இன்று இந்த வரவேற்புக்கு அவசியமே இருந்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை சந்தேகமாக உள்ளது – ப. சிதம்பரம்

பிஹார் மாநில மோத்திஹரி பகுதியைச் சேர்ந்த திவ்யன்ஷு சிங் என்ற மருத்துவ மாணவர் தாங்கள் எல்லை வந்து சேர்ந்ததை கூறியுள்ளார். அதில், “நாங்கள் உக்ரைன் எல்லையைக் கடந்து ஹங்கேரி வந்த பின்னர்தான் எங்களுக்கு இந்திய தூதரகத்தின் உதவி கிடைத்தது. அதுவரை எங்களால் தூதரகத்தைச் சேர்ந்த யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகவே நானும் எனது நண்பர்கள் 10 பேரும் சேர்ந்து ஒரு குழுவாகக் கிளம்பினோம். நாங்கள் ரயிலில் ஏறியபோது அந்த ரயில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ரயிலில் இருந்த உள்ளூர்வாசிகள் எங்களுக்கு உதவினார்கள். எங்கோ சில இடங்களில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை உள்ளூர் மக்கள் உதவியாகவே இருந்தனர். ஒரு வழியாக நாங்கள் ஹங்கேரியை எல்லையை அடைந்தோம். இது எல்லாமே எங்களின் சொந்த முயற்சி. ஹங்கேரிக்குள் சென்ற பிறகே தூதரகம் எங்களுக்கு உதவியது. இங்கு வந்திறங்கியவுடன் எங்களுக்கு ரோஜா மலர் கொடுக்கப்பட்டது. இதை வைத்து நாங்கள் என்ன செய்யப்போகிறோம். அமெரிக்காவை போல் எங்களையும் மிக முன்கூட்டியே எச்சரித்திருக்கலாம். ஒருவேளை எங்களுக்கு அங்கு ஏதாவது ஆகியிருந்தால் எங்கள் பெற்றோரின் நிலை என்னவாயிருக்கும்.

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர்கள்: ஐபிசிசி அறிக்கை விடுக்கும் எச்சரிக்கைகள் என்னென்ன?

நாங்களாகவே உரிய நேரத்தில் செயல்பட்டு எங்கள் சொந்த முயற்சியில் எல்லையை அடைந்ததால் தப்பித்திருக்கிறோம். சரியான நேரத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் இங்கு பூங்கொத்து கொடுக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது” என்று கூறியுள்ளார்.

credit: ndtv.com

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்