Aran Sei

விசாரணைக் கைதிகளை பல ஆண்டுகள் சிறையில் அடைத்தால் விசாரணை எதற்கு? – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேள்வி

விசாரணைக் கைதிகளை பல ஆண்டுகளாக சிறையில் அடைத்தால், பின்பு விசாரணை எதற்கு என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்.

35 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட வழக்கில் நான்கு ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக இருக்கும் ஒருவருக்கு பிணை வழங்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம்: ’முதல்வர் மோடியும் பிரதமர் மோடியும் முரண்பட்டு பேசுகிறார்கள்’ – ராகேஷ் திகாயத்

குற்றம்சாட்டப்பட்டவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், எதிர்காலத்தில் வழக்கின் விசாரணை முடிவதற்கான சாத்தியம் இல்லை என கூறியுள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் 66 வயது முதியவர், அவரால் இனியும் விசாரணை முடியும் வரை நீதிக்காக சிறையில் காத்துக் கொண்டு இருக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

விசாரணையின்றி எத்தனை ஆண்டுகள் இவரை சிறையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என அரசு வழக்கறிஞரிடம் கேட்டபோது, அதற்கு 4 ஆண்டுகள் என அவர் பதிலளித்தார்.

லக்கிம்பூர் வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட ஒன்றிய இணையமச்சரின் மகன் – 11 மணிநேர விசாரணைக்கு பின் கைது

”ஐந்து ஆண்டுகள் ஏன்?. 10 ஆண்டுகள் கூட வைத்திருங்கள். அப்படிச் செய்தால் விசாரணைக்கு அவசியம் கூட இருக்காது.”என தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

”அவருக்கு இப்போதே 66 வயதாகிறது. விசாரணை முடிவடையும்போது, அவர் உயிருடன் இருக்க மாட்டார்” என ரமணா குறிப்பிட்டுள்ளார்.

Source : The Hindu

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்