Aran Sei

உலகை குலுக்கியுள்ள ‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் – வருமானத்தை வெளிநாடுகளில் பதுக்கிய பிரபலங்கள்

ரி விதிப்பு குறைவாக உள்ள நாடுகளில், கார்ப்பரேட் நிறுவனங்களும் தனிநபர்களும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உட்பபட பல்வேறு வழிகளில் முதலீடுகள் செய்தவற்கான சேவையை வழங்கும் 14 சர்வதேச நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 13.4 லட்சம் ஆவணங்கள், ஐசிஐஜே (International consortium of Investigative Journalists) என்ற சர்வதே புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்பிற்கு கிடைத்துள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்று பெயரிடப்பட்டுள்ள, சுமார் 3 டெரா பைட் அளவுள்ள அந்த ஆவணங்களை, 117 நாடுகளில் உள்ள 150 ஊடக நிறுவனங்களுக்கு ஐசிஐஜே வழங்கியது. 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சுமார் ஓராண்டு அந்த ஆவணத்தை ஆராய்ந்ததில், 200 நாடுகளைச் சேர்ந்த 330 அரசியல்வாதிகள், 130 பெரும் செல்வந்தர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள், அரசு குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் குற்றப்பின்னணி உடையர்கள் என பலரும், வெளிநாடுகளில் தங்கள் பணத்தை பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் 380 இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ள நிலையில், ஐசிஐஜேவுடன் இணைந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுகுறித்து இந்தியாவில் புலன் விசாரணையை நடத்தியுள்ளது. இதில் 60 இந்தியர்களின் (நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்) வெளிநாட்டு முதலீடுகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளது.

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், பனாமா, ஹாங்காங், செஷேல்ஸ் உட்பட வரி குறைந்த மற்றும் முதலீடு குறித்த ரகசியம் காக்கப்படும் நாடுகளில் ரியல்எஸ்டேட், விமானம், சொகுசு கப்பல், கலைப் பொருட்கள், பங்குகள் என பல்வேறு வழிகளில் தனி நபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளது பண்டோரோ பேப்பர்ஸ் ஆவணங்கள் மூலம் தெரியிவந்துள்ளது.

பெரும்பாலும் தங்கள் வருமானத்தை, தங்களுடைய செர்ந்த நாடுகளை சேர்ந்த வருமான வரித்துறையினரிடமிருந்து மறைப்பதற்கே வெளிநாடுகளில் இத்தகைய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதை ஐசிஐஜே மற்றும் சர்வதேச ஊடகங்கள் நடத்திய விசாரணைகள் உறுதி செய்கின்றன.

இந்தியாவில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, நிரவ் மோடி உட்பட 380 பேர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது பண்டோரா பேப்பர்ஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்