Aran Sei

தேச விரோத நடவடிக்கை என்றால் என்ன? – அரசு விளக்கமளிக்க நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தல்

ம்பிவட வலைபின்னல் விதிகள் 2014ல் (Cable Network Rules 2014) குறிப்பிடப்பட்டுள்ள, “தேச விரோத நடவடிக்கை” என்பதற்கு ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று “ஊடக செய்தி வழங்கல் நெறிமுறை” தொடர்பான அறிக்கையில் நாடாளுமன்ற நிலைக் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தலைமையிலான நிலைக் குழு, இந்த குறிப்பிட்ட விதிகளில் “தேச விரோத நடவடிக்கை” என்ற பதத்தினால் பல ஊடகங்கள் பாதிப்படைவதாகவும், ஆகவே இதில் உள்ள குழப்பத்தை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

காங்கிரஸை தவிர்த்து புதிய அணியை அமைக்கிறாரா மம்தா பானர்ஜி? – களைகட்டும் அரசியல் ஆட்டம்

கம்பிவட வலைபின்னல் விதிகள் 2014, பிரிவு 6(1)(இ), தேச விரோத நடவடிக்கையை ஊக்குவிக்கும் செய்திகளை ஊகடங்கள் ஒளிபரப்பக் கூடாது என்று கூறுகிறது. ஆனால், 1994 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட விதியில், “தேச விரோத நடவடிக்கை” என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான விளக்கம் அளிக்கப்படாததால், பல ஊடக நிறுவனங்கள் இந்த விதியினால் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே, இதற்கான உரிய விளக்கத்தை அளிப்பதுடன் இதில் உள்ள குழப்பத்தை நீக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்