Aran Sei

‘மக்களுக்கு என்ன செய்தீர்?’ – கேள்வி கேட்ட இளைஞரைத் தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ

ஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில், போவா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜோகிந்தர் பால், நேற்று தனது சொந்த தொகுதியில் மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், ஜோகிந்தர் பாலை நோக்கித் தொடர்ந்து கோபமாக கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்.

‘மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’- ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

இளைஞரை அருகில் அழைத்த ஜோகிந்தர், அவரது கையில் ஒலிப் பெருக்கியைக் கொடுத்துப் பேசுமாறு கூறினார். மைக்கை வாங்கிய அந்த இளைஞரும், இந்தத் தொகுதிக்குக் கடந்த 5 ஆண்டுகளாக என்ன நன்மை செய்தீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, அந்த இளைஞரைக் கன்னத்திலும், தலையிலும் சரமாரியாக அடித்தார். அப்போது அங்கிருந்த சில காவல்துறையினரும், ஜோகிந்தரின் ஆதரவாளர்களும் உடன் சேர்ந்து அந்த இளைஞரைத் தாக்கியுள்ளனர். பின்னர், வேறுசில காவல்துறையினர் அங்கு உடனடியாக வந்து அந்த இளைஞரை அவர்களிடம் இருந்து மீட்டு வெளியேற்றினர்.

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலானது. சட்டமன்ற உறுப்பினர் ஜோகிந்தர்  செய்கைக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பொதுமக்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

“காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் இந்த நடவடிக்கை அவர்களின் சகிப்பின்மையைக் காட்டுகிறது” என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்