Aran Sei

மன அழுத்தத்திற்கு காரணம் என்ன? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

மோஃ என்பது தாதுக்களின் வலிமையை அளவீடு செய்யும் ஒரு அளவுகோல். பத்து வரை அளவு கொண்ட இந்த மோஃ அளவீட்டில், பத்து வலிமை மதிப்பெண் உள்ள ஒரு பொருள் வைரம். இந்த வைரங்களுமே பத்து மோஃவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்தால் நொறுங்கி விடும். வைரங்களுக்கே அழுத்தம் பொறுக்க முடிய வில்லை என்ற நிலையில் மிருதுவான மனித மனதிற்கு?

மனஅழுத்தம், உலக சுகாதார அமைப்பின் படி 10% மக்களைப் பாதிக்கக்கூடிய ஒரு நோய். உலக மக்கள்தொகையில் 80கோடி மக்களைத் தாக்கும் ஒரு பிரச்சினை. அதாவது பத்தில் ஒரு நபர் நமக்குத் தெரிந்தவரில் இந்த நோயால் பாதிக்கப் பட்டிருப்பார். பிற நோய்களைப் போன்று அதிக அக்கறையோ, மருத்துவரை அணுகும் குணமோ அதிகம் இல்லாத ஒரு பிணி.

மது மனநோயா? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

மனம், இதன் இடத்தை மூளையின் ஒரு பகுதிக்குள் ஒதுக்கிவிட முடியாது. ஹிப்போகாம்பஸ் என்னும் பகுதியில் இருப்பதாகவும், பேசல் காங்கிலியாவின் நியூரான் பின்னல்களுக்குள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் அனுமானிகின்றர்கள். இந்த இடம் தெரியாத மனதிற்கு ஏற்படும் பிரச்சனைகளுள் தலையாயது மன அழுத்தம்.

இடமே நிலையற்ற ஒரு பொருளுக்கு அழுத்தமா என இடம் இல்லாத ஒரு பொருளுக்கு எப்படி நோய் வரும் என நாம் அனைவரும் சிந்திக்கலாம். நாம் வாழ்வில் அன்றாடம் பார்த்து வரும் சம்பவங்கள், கற்றுவரும் செய்திகள், பயின்று வரும் தொழில்கள், பழகி வரும் மனிதர்கள் இவை அனைத்தும் சேர்ந்தே நம் சிந்தனைகளை வடிவமைக்கின்றன. இப்படி பல ஆதிக்கங்களினால் வடிவமைக்கப் படும் நமது மனம், மேற்கண்ட பல்வேறு கரணங்களில் உள்ள எதேனும் ஒரு காரணத்தினால் மன அழுத்தம் ஏற்படலாம். காரணம் இன்றியும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் கூட சில நபர்களுக்கு உள்ளது.

மன நலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

மன அழுத்தம் ஏற்பட்ட ஒரு நபருக்கு, வேலை செய்வதில் வெறுப்பு, இயங்குவதில் வெறுப்பு, துக்கமின்மை, அதிக துக்கம், பசி இன்மை, அதிக பசி, வாழ்வில் பிடித்தம் இன்மை, உந்துதலின்றி இருத்தல், தாம்பத்தியத்தில் இஷ்டம் இன்மை, சக மனிதர்கள் மீது வெறுப்பு, வாழ்வில் நம்பிக்கை இன்மை என்று பல மாதிரியாக தோற்றுவிக்கும்.

சிலருக்கு இதில் high functioning depressive எனப்படும், “அதிக செயல்பாடு உடன் மன அழுத்தம்” ஏற்படும், இவர்கள் தங்களின் தின சரி வேலைகளைச் சரியாக நிறைவேற்றுவார்கள், எனினும் இந்தத் தினசரி வேலைகள் புரிவது அவர்களுக்குச் சாதாரண மனிதர்களைவிட அதிக ஆற்றலை உபயோகித்து, அவர்களை அதிக களைப்புக்கு அவர்கள் மனம் உள்ளாக்கும், அவர்கள் அதிக வேதனையுடனேயே செயல் படுவார்கள். இவர்களின் நோய் தன்மையைக் கண்டறிவது சாதாரண மன அழுத்தத்தை உடையவர்களைவிடக் கடினமாகும். ஏனெனில் தினசரி வேலைகளை அவர்கள் சரியாக செய்து வருவதால் அவர்களிடம் ஒரு பிரச்சனை உள்ளதாகவே சக நபர்கள் உணர மாட்டார்கள்.

ஒரு ரோஜா செடியின் காதல் – டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட காலித் சைபி கடிதம்

இந்த மன அழுத்தத்திற்கு முக்கிய காரணிகள், டோபமைன் செராடனின் என்ற இரு முக்கிய நரம்பு கடத்திகளே ஆகும். இந்த டோபமைன் செராடோனின் மூளையில் உள்ள நரம்பு பகுதிகளில் சரிவரச் சுரக்கவில்லை என்றால் மன அழுத்தம் ஏற்படும். சாதாரணமான ஒரு மனித மூளையில் ஒரு சந்தோஷத்திற்குரிய ஒரு வாழ்வியல் நிகழ்வு நடைபெறுமாயின் செரோட்டோனின் மற்றும் டோபமைன் சுரந்து மகிழ்வை ஏற்படுத்தும். வாழ்வியல் நிலை, குடும்ப சூழல், வேலை பணி சுமை, சந்தோசமற்ற மணவாழ்வு என இருக்கும் பல்லயிரகணக்கான கரணங்களில் ஒன்று இந்த டோபமைன் செரடோனின் சம நிலையைச் சீர்குலைய செய்து மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

அனைவருக்கும் பிரச்சனைகள் இருக்க, ஒரு சிலருக்கு மட்டும் ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது என்ற கேள்வி எழலாம். எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட முகம் இருப்பது போல்தான் ஒவ்வோரு மனிதருக்குள்ளும் ஒரு தனிவகையான மனம் இருக்கும். இரு மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான சூழ்நிலைகளைக் கையாளும் திறமையும் இருக்கும். எப்படியொரு வாகன விபத்து நடந்தால் ஒரு நபர் அந்த விபத்திற்கு காரணம் இல்லையோ அது போல மன அழுத்தத்திற்கு அந்த நபர் காரணமாக மாட்டார்.

ஒரு முழு பேருந்தை சோற்றுக்குள் மறைத்த நிதின் கட்கரி – வெளிப்படும் பாஜகவின் ஊழல் சாம்ராஜ்யம்

மன அழுத்தத்தைச் சோம்பேறி தனம் எனத் தட்டி கழிக்கும் ஒரு இழிவான பழக்கம் நம் மக்களிடம் முக்கியமாக வயது முதிர்ந்த மக்களிடம் உள்ளது. தற்கால இளைஞர்கள் அவர்களின் காலத்தைவிட பல மடங்கு அதிகம் போட்டி சுமையுள்ள ஒரு சூழலில் அவர்கள் இருக்கிறார்கள் என உணருவதில்லை. மன அழுத்தத்தைச் சோம்பேறி எனத் தட்டி கழிக்கும்போது மனஅழுத்தம் உடையவர் இன்னும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

மன அழுத்தம் குறித்த புரிதல் நம் சமுதாயத்தில் இன்னும் சரிவர ஏற்படவில்லை. இந்த மன அழுத்தத்தினால் மாதவிடாய் பெண்களும் அதிக பாதிப்புக்கு உள்ளகின்றார்கள். மாதவிடாய் பெண்களுக்கு முக்கிய காரணியாக அவர்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்கள். முக்கியமாக தைராய்டு ஹார்மோன் சம நிலை சீர் குலைவதால் மன அழுத்தம், குழப்பம், வெறுமை போன்றவை ஏற்படும்.

நினைவுக்குள் சுழலும் ரணம் – 21 ஆண்டுகளுக்கு பிறகும் அச்சுறுத்தும் ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதல்

மன அழுத்தத்திற்கு பார்மாகோ தெரபி எனப் படும் மருந்துகள் மூலம் சரி செய்வது, சைகோ தெரபி என கவுன்சலிங் மற்றும் செயல்முறைகளை மாற்றி அமைத்தல் மூலம் சரி செய்வது. மருந்துகள் கொடுத்து நரம்பு கடத்தியின் நிலைகளைச் சமநிலை படுத்தினாலும், ஒரு மனிதரின் சூழ்நிலைகள் மற்றம் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களின் நிலையே அவர்களின் நீண்ட நாள் நலனுக்கு வழி வகுக்கும்.

மருத்துவர் மருந்துகள் மட்டும் அல்லாது, வாழ்க்கை நிலைகளை நிர்வாகிக்கும் திறன்முறைகளை கற்றுதருவர்கள். இதன் மூலம் மனசுமைகளைக் கையாளும் திறன்கள் ஏற்பட்டு மன அழுத்தத்தைக் கையாளும் திறன் ஏற்படும். பிறரை போன்று இன்பத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்லும் நிலை ஏற்படும். மன அழுத்தம் தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பதால், இதை அசட்டு தனமாக கருதுவது ஆபத்தில் முடியும். நம் மனம் போல் பிறர் மன சந்தோசத்தையும் நாம் பேணுதல் வேண்டும்.

மன நலம் பகிர்வோம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்