Aran Sei

வங்கிகளுக்கு திவால் நோட்டீஸ் வழங்கிய அனில் அம்பானி – வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடிகள் சொத்துகள் வைத்திருப்பது அம்பலம்

Credits : The Indian Express

ங்கிகளிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் திவால் நோட்டீஸ் வழங்கியிருந்த அணில் அம்பானியின் நிறுவனங்களின் பெயரில் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடியில் சொத்துகள் இருப்பதாக பண்டோரா பேப்பர்ஸ் தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் சொத்துகள்குறித்த விவரங்களை ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளிடப்பட்டுள்ளது.

பிபிசி, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள 150 ஊடங்க நிறுவனங்கள் அடங்கிய புலனாய்வு பத்திரிக்கையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு (ஐசிஐஜெ) இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

‘பண்டோரா பேப்பர்ஸ்’ – அவிழும் உண்மைகள்

உலகம் முழுவதும் உள்ள சட்டம் மற்றும் நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து 1.19 கோடி ஆவணங்களை ஐசிஐஜெ கைப்பற்றியுள்ளது.

சீன அரசு கட்டுப்பாட்டில் உள்ள மூன்று வங்கிகளுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், அனில் அம்பானி அவரது நிகர சொத்து மதிப்பு பூஜ்யம் என தெரிவித்திருந்தார்.

அனில் அம்பானியின் சொத்துக்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை என நீதிமன்ற கேள்வி எழுப்பியது.

உலகை குலுக்கியுள்ள ‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் – வருமானத்தை வெளிநாடுகளில் பதுக்கிய பிரபலங்கள்

இந்த வழக்கில் மூன்று வங்கிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 71.6 கோடி அமெரிக்க டாலர்கள் செலுத்த அம்பானிக்கு உத்தரவிடப்பட்டது. இந்த தொகையைச் செலுத்த மறுத்த அம்பானி, அவருக்கு உலகில் எங்கும் சொத்துக்கள் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெர்சி, பிரிட்டீஷ் வெர்ஜின் தீவுகள், சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் அம்பானியின் நிறுவனத்தின் பெயரில் 18 நாடுகளில் சொத்து இருப்பதாக பண்டோரா பேப்பர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

‘வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி இருக்கும் இந்தியர்கள்’ – சச்சின், அணில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களை வெளியிட்ட பண்டோரா பேப்பர்ஸ்

2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரை பெறப்பட்ட கடன்களில் இருந்து சுமார் 130 கோடி அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31, 2020 வரையிலான காலத்தில் அனில் அம்பானி இந்திய வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு என மொத்தமாக சுமார் 86 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் தொகை நிலுவை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்