அமித் ஷாவிடம் ”உங்கள் மகனைப் பற்றிப் பேசுங்கள், அவர் எவ்வாறு இவ்வளவு சம்மாதித்தார்?” என முதலில் கூறுங்கள் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மம்தா அரசு, அவரது மருமகனின் நலனிற்காக வேலை செய்கிறது என்ற அமித் ஷா பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அமித் ஷாவின் மகன்குறித்து மம்தா பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் கூச் பிஹார் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ”மோடியின் அரசு மக்கள் நலனிற்காக உழைக்கிறது, மம்தாவின் அரசு, அவரது மருமகனின் நலனிற்காக உழைக்கிறது. அவர் தனது மருமகனை முதல் அமைச்சராக்க யோசித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை திலிப் கோஷ் இங்குப் போட்டியிடவில்லை என்றால், அவர் இப்போதே அறிவிப்பார்” என அவர் தெரிவித்ததாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
மீண்டும் மீண்டும் பரிணாமம் அடையும் கொரோனா நோய்க்கிருமி – தொடர் தடுப்பூசிகள் தேவை
இதற்குச் சில மணிநேரத்திற்கு பிறகு, பொது விழாவில் கலந்துகொண்ட மம்தா, “அவர்கள் பத்திஜா-புவா (அத்தை – மருமகன்) பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். உங்கள் மகன் மட்டும் என்ன? நாங்கள் வங்கத்தில் இருப்பதால் மோசமாக இருக்கிறோம். உங்கள் மகன் எப்படி இவ்வளவு சம்பாதித்தார்? முதலில் அதற்குப் பதில் கூறுங்கள். திதி மிகவும் நல்லவர். உண்மையைத் தான் பேசுவார். என்னுடன் நீங்கள் மோதினால் நொறுங்கி போவீர்கள் (தீதி சோ ஜோ தக்ரேயேகா, சூர் சூர் ஹோ ஜெயேகா)” எனப் பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”நான் கோல்கீப்பராக இருப்பேன், நீங்கள் என்னைத் தாண்டி எத்தனை இலக்குகளை அடைகிறீர்கள் என்பதை பார்க்க விரும்புகிறேன்” என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாக, என்டிடிவி கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.