Aran Sei

மேற்குவங்கத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிஆர்பிஎப் காவலர் – தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்

மேற்குவங்கத்தில் தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்த மத்திய பாதுகாப்புப் படை காவலர், அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தாரகேஸ்வர் ஹூக்லி பகுதியில் மத்திய பாதுகாப்புப் படை காவலர், சிறுமியின் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவரை அப்பகுதி மக்கள் தாக்கியுள்ளனர். பின் அவர் காவல்துறையால் காப்பாற்றப்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்புவது நல்ல சமூகத்தை உருவாக்கும் – போலி செய்திக்கு பாடகி பதிலடி

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய அவர், காலை 9.30 அளவில் இந்தச் செய்தி எங்களுக்குக் கிடைத்தது. “பல தொலைக்காட்சிகளிலும் இப்போது இந்தச் சம்பவம் வெளியாகி இருப்பதால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளதாக தி வயர் செய்தி கூறுகிறது.

மகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் குறித்து புகார் கொடுத்த தந்தை சுட்டுக்கொலை – உத்தர பிரதேசத்தில் பயங்கரம்

இந்நிலையில், சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளானது தொடர்பாகப் புகார் மனுவொன்றையும் தேர்தல் ஆணையத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன் அளித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து காவல் நிலையத்திலும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்