மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடைபெற்றது தொடர்பான விசாரணையை மேற்கு வங்க சிபிசிஐடி காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.
பூர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல இருக்கும் சிபிசிஐடி அதிகாரிகள், அங்குச் சாட்சியங்களைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.
நந்திகிராம் தொகுதியில் மார்ச் 10 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேஹ் சூபியான் அளித்த புகாரின் பெயரில் நந்திகிராம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு இயக்குநர் விவேக் சகாய், பூர்பா மெதினிபூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீண் பிரகாஷ் ஆகியோரை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.