Aran Sei

மேற்குவங்கத்தில் நிர்வாணமாக செல்லவேண்டுமென்று தண்டனைக்குள்ளான பழங்குடியினப் பெண் – சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து காவல்துறை நடவடிக்கை

மேற்குவங்க மாநிலம் அலிப்பூர்டூர் மாவட்டத்தில், கணவனை விட்டு விலகித் தனக்கு பிடித்த நபருடன் சென்ற பழங்குடியினப் பெண்ணை அந்த கிராமத்தினர் அடித்துத் துன்புறுத்தி, நிர்வாணமாக ஊர்வலமாகக் கூட்டி சென்றுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்கள் தாக்கப்பட்டால் இந்திய இறையாண்மை பாதிக்கும் – வேல்முருகன்

கடந்த ஜூன் 10 அன்று, அந்த பெண் 6 மாதத்திற்கு பின் தனது கணவன் வீட்டிற்கு வந்த நிலையில், அக்கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்தினர் நிர்வாணமாக செல்ல வேண்டும் என்று தண்டனை விதித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, அவரது தாயின் வீட்டிலிருந்த அந்த பெண்ணை அழைத்து வந்து, சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.

ஒரு இஸ்லாமிய ஆணும், இந்து பெண்ணும் முத்தமிட்டால்.. – அதனால் என்ன?

இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மூன்று பேரைக் காவல்துறை கைது செய்துள்ளதாகவும், 8 பேர்மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்