Aran Sei

‘இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக துர்கா பூஜை கொண்டாடும் வங்க பண்பாட்டை அழிக்கும் பாஜக’ – மம்தா குற்றச்சாட்டு

credits : pti

மேற்கு வங்கத்தை பிளவுபடுத்தும் அரசியல் விளையாட்டை பாஜக நடத்துகிறது என்றும் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணியும் இதே பிளவுப்படுத்தும் பணியை செய்ய பாஜகவிடமிருந்து பணம் வாங்குகிறது என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,  மாநில முதலமைச்சருமான  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

‘கூட்டாட்சி மீதான பாஜகவின் தாக்குதலுக்கு எதிராக ஒன்றிணைவோம்’ : 14 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

இன்று (ஏப்ரல் 3), மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், “இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே, திரிணாமுல் கரே கரே என்று முழங்குகிறார்கள். ஆனால், பாஜக கூறுகையில் ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே, இந்து, இஸ்லாமியர் பாக் கரே, பட்டியல் சமூகம் கோ பாக் கரே (வெளியேறு) என்று முழங்குகிறார்கள். பாஜக வங்காளத்தை அழிக்கிறார்கள்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

எங்கள் பண்பாடு என்னவென்றால், இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் தேநீர் அருந்தியபடி துர்கா பூஜையை ஒன்றாக கொண்டாடுகிறார்கள் என்றும் எங்கள் வங்க கிராமங்களில் அமைதியின்மையை உண்டாக்கி, அதில் பாஜக பயனடைய முயல்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இஸ்லாமியர்களை எதிரியாக்கி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாஜக – : பத்ருத்தின் அஜ்மல்

“மேற்கு வங்க இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிளவுபடுத்துவதற்காக ஓவைசியின் தலைமையிலான ஏஐஎம்ஐஎம் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணிக்கு பாஜக பணம் கொடுத்துள்ளது. நீங்கள் உங்களுக்குள் பிளவுற விரும்பவில்லை என்றால், நீங்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டை விரும்பவில்லை என்றால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்