Aran Sei

பெகசிஸ் ஸ்பைவேர் – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்த மேற்கு வங்க அரசு

Image Credits: News Click

பெகசிஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்டது விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஒ நிறுவனத்தின் பெகசிஸ் உளவு மென்பொருள் கொண்டு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டார்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வேவு பார்க்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

பட்டியல் சமூக மக்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமை – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் பிரான்ஸ் நாட்டின் லாபநோக்கமற்ற ஊடக நிறுவனமான நிறுவனமான பர்பிட்டன் ஸ்டோரிஸ் நடத்திய ஆய்வில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.

திருமணமத்திற்காக பெண்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணையிக்க வேண்டும் – பிரதமருக்கு பெண்கள் அமைப்பினர் வேண்டுகோள்

இதற்கு ஒன்றிய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்