Aran Sei

வாக்குப் பதிவின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு – விசாரணை நடத்தப்படும் என மம்தா அறிவிப்பு

credits : pti

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான 4வது கட்ட தேர்தலின்போது, கூச் பஹர் மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குசாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணையம், கூச் பஹர் மாவத்திற்குள் அரசியல்வாதிகள் நுழைய 72 மணி நேரம் தடை விதித்தது.

இந்த தடைக்காலம் முடிந்த பிறகு, கூச் பஹர் மாவட்டத்திற்கு சென்ற மம்தா பானர்ஜி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கூச் பஹர் கொடூரமான கொலைக்குக் காரணமான அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின்படி அவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்படும்” என தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த முதல்முறை வாக்காளரான 18 வயது இளைஞன் அனந்த பர்மனின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்