Aran Sei

‘மேற்கு வங்க தலைமைச் செயலாளரை திரும்ப பெறுவது ஒருதலைப்பட்சமானது’ – பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

credits : the hindu

மேற்கு வங்க தலைமைச் செயலாளரைத் திரும்பப் பெறும் உத்தரவு ஒருதலைப்பட்சமானது என்றும் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில், மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் அல்பன் பண்டோபாத்யாயாவை திரும்பபெறுவதாக இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், மே 31 ஆம் தேதிக்குள் அவரைப் பணியாளர் பயற்சி துறைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மேற்கு வங்க தலைமைச் செயலாளரை திரும்ப பெற்ற ஒன்றிய அரசு: ‘தொற்றுடன் சண்டையிடுங்கள் மாநில அரசுகளுடன் அல்ல’ – அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த உத்தரவை ஏற்க மறுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று (மே 31) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில், “மேற்குவங்க தலைமைச் செயலாளரைத் திரும்பப் பெறும் உத்தரவு ஒருதலைப்பட்சமானது. நியாயமற்றது. இது உங்களுடைய ஒப்புதல் பெறப்பட்டே, மாநில அரசு மற்றும் அம்மக்களின் நலன்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டான கொரோனா பேரிடர் காலத்தில், ஒன்றிய அரசின் இச்செயலை ஏற்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

“கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு பணி நீட்டிப்புக்கு ஒப்புதல் தெரிவித்து இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த திடீர் மாற்றம் எதற்கு?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘மம்தா திதி, பாஜகவில் இணைந்தது தவறுதான்; எங்களை மன்னியுங்கள்’ – திரிணாமூல் காங்கிரஸுக்கு திரும்பும் பாஜகவினர்

மேலும், “இந்த முடிவை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இம்முடிவை திரும்பப் பெற வேண்டும். மேற்கு வங்க மக்களின் சார்பாக தாழ்மையுடன் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” என்று பிரதமருக்கு எழுதிய மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Source; pti

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்