Aran Sei

மக்களுக்காகத் தொடர்ச்சியாகப் போராடுவேன் – ’திரிணாமுல்’ 23 வது ஆண்டு விழாவில் மம்தா பானர்ஜி

Image Credits: The Indian Express

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ,தனது 23 வது ஆண்டு விழாவை மேற்கு வங்கம் முழுவதும் கொண்டாடியுள்ளது. அப்போது, மேற்கு வங்கத்தின் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸின் தலைவருமான மம்தா பானர்ஜி மக்களுக்காகத் தொடர்ச்சியாகப் போராடுவேன் என்றும் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர்கள் கட்சி கொடியை அதன் மாநில தலைமையகத்தில் ஏற்றியுள்ளனர். மக்களுக்குச் சேவை செய்வதில் அயராது உழைத்ததாகக் கூறி தொண்டர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கடி – போர்க்கொடி தூக்கிய திரிணாமுல் தலைவர்கள்

“திரிணாமுலுக்கு இன்று 23 வது ஆண்டு விழா, இத்தருணத்தில், 1998-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி கட்சி தொடங்கப்பட்டதை குறித்து நாங்கள் நினைவுகூர்கிறோம். இந்தப் பயணத்தின் போது பெரும் போராட்டங்களைச் சந்தித்துள்ளோம். இருப்பினும் மக்களுக்காக மட்டுமே நாங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தைத் தொடர்ந்து அடைந்து வருகிறோம்” என்று மம்தா பானர்ஜி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  திரிணாமுல் காங்கிரஸ் ஒரு பத்தாண்டு கால ஆட்சி அதிகாரத்தை நிறைவு செய்யவுள்ளது. இந்நிலையில், மாநிலத்தை மேம்படுத்துவதற்காகத் தனது போராட்டத்தைத் தொடர்வதாக மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.

‘பிளவை ஏற்படுத்தும் மேற்கு வங்க ஆளுநரை திரும்ப பெறுங்கள்’ – குடியரசு தலைவருக்கு திரிணாமுல் கடிதம்

“ஒவ்வொரு நாளும் வங்கத்தை சிறப்பாகவும் வலுவாகவும் மாற்றுவதற்காகத் தொடர்ந்து போராடும் மா-மாத்தி-மனுஷ் (தாய்-பூமி-மனிதன்) மற்றும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.

திரிணாமுல் குடும்பம் இந்தப் பணிகளை வரவிருக்கும் காலங்களிலும் தொடரும்!” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி காங்கிரசிலிருந்து பிரிந்து, 1998-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி, அப்போதைய இடதுசாரிய முன்னணி ஆட்சிக்கு மாற்றை கொண்டுவரும் நோக்கத்துடன் திரிணாமுல் காங்கிரசை தொடங்கினார். காங்கிரசுடன் கூட்டணி வைத்த பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் 2011-ம் ஆண்டு மே மாதம் ஆட்சி என்கிற இலக்கை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்