Aran Sei

‘தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன் வழங்குவதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்’ – பிரதமருக்கு மம்தா கடிதம்

மேற்கு வங்க முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்ற முதல் நாளில், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

விளம்பரம்

கொரோனா தடுப்பு மருந்து மற்றும் ஆக்ஸிஜன் வழங்குவதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் அவர் கோரியுள்ளார்.

தனது இரண்டு பக்க கடிதத்தில், மாநில மக்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்து செலுத்தும் பொருட்டு மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, பிரதமரிடம் தான் கோரியதை நினைவு கூர்ந்துள்ளார்.

தடுப்பூசிகளை ஏழைகள் பெற முடியுமா?; விலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்

மேலும், மேற்கு வங்க மாநிலத்திற்கு அதிக ஆக்ஸிஜனை ஒதுக்குமாறு கோரியுள்ள மம்தா பானர்ஜி, “மாநிலத்தில் மருத்துவ ஆக்ஸிஜனின் பயன்பாடு ஒரு நாளைக்கு 220 மெட்ரிக் டன்னில் இருந்து 400 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Source : New Indian express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்