Aran Sei

‘நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, நீதிமன்றத்தில் முறையிடுவேன்’ – மம்தா பானர்ஜி

credits : the hindu

ந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் அதுதொடர்பாக தான் நீதிமன்றம் செல்லவிருப்பதாகவும் நந்திகிராம் தொகுதியில் தோல்வியுற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 2), மேற்கு வங்க சட்டபேரவையின் 294 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுள்ளது.

‘வகுப்புவாத கலவரத்தை தூண்டும் பாஜகவின் வலையில் சிக்கிவிடாதீர்’ – சிறுபான்மையினரை எச்சரித்த மம்தா பானர்ஜி

மறுபுறம், முதல்வர் மம்தா போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் அவர் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மம்தா பின்னடைவை சந்தித்திருந்தாலும், பின்னர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட முன்னிலை பெற்றார். சிறிது நேரத்திற்கெல்லாம் சுவேந்து அதிகாரி முன்னிலையில் வந்துள்ளார். இந்த இழுபறி நீண்ட நேரம் தொடர்ந்துள்ளது.

அதைத்தொடர்ந்து, மம்தா பானர்ஜி 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், சிறிது நேரத்தில், பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பரப்புரைக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம் : ஒற்றையாளாக சக்கர நாற்காலியுடன் போராட்டத்தில் இறங்கிய மம்தா

இதுகுறித்து, பேசிய மம்தா பானர்ஜி, “நந்திகிராம் தொகுதியில் அறிவிக்கப்பட்ட முடிவுகள் அநியாயமானவை. நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று ஏராளமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. விரைவில், அவற்றை வெளியிடுவேன். இதுதொடர்பாக, நான் நீதிமன்றத்தில் முறையிடுவேன்.” என்று தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

வெற்றிபெற்ற சுவேந்து அதிகாரி, இந்தத் தேர்தலுக்கு முன்னர் திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்