ஜி-20 மாநாட்டுக்கு தாமரை சின்னத்திற்கு பத்தி வேறு சின்னத்தை பயன்படுத்தி இருக்கலாம் – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்
நமது தேசிய மலராக தாமரை உள்ளது என்றபோதிலும், அது அரசியல் கட்சி ஒன்றின் சின்னமும் ஆகும். அதனால், ஜி-20 மாநாட்டுக்கான சின்னம் ஆக தாமரை மலர் பயன்படுத்தப்படாமல் வேறு எதாவது ஒரு சின்னத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்தது. 2-வது நாள் நடந்த பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விசயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம். அடுத்த ஓராண்டில், உறுப்பு நாடுகளின் கூட்டு நடவடிக்கைக்கு தூண்டுதல் அளிக்கும் வகையிலான, சர்வதேச முதன்மை இயக்கம் ஆக ஜி-20 அமைப்பை பணியாற்றும் வகையில் செய்வது எங்களது கடுமையான முயற்சியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவராக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “டெல்லியில் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு எதுவும் கிடையாது. இது ஜி-20 மாநாட்டுக்கான சந்திப்பு மட்டுமே ஆகும்.நமது தேசிய மலராக தாமரை உள்ளது என்றபோதிலும், அது அரசியல் கட்சி ஒன்றின் சின்னமும் ஆகும். அதனால், ஜி-20 மாநாட்டுக்கான சின்னம் ஆக தாமரை மலர் பயன்படுத்தப்படாமல் வேறு எதாவது ஒரு சின்னத்தை பயன்படுத்தியிருக்கலாம். அவர்களுக்கு வேறு சில வாய்ப்புகள் உள்ளன என கூறியுள்ளார்.
வாக்களிக்கும் தினத்தில் ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியினர் வி.வி.ஐ.பி.க்கள். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். அவர்களை மன்னித்து விடுவார்கள் என்று குஜராத் சட்டசபைத் தேர்தல் பற்றி மம்தா பானர்ஜி குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
Source : the print
சூர்யாவும் டைசியும் அக்கா தம்பிதான் | திருப்பதி நாராயணனின் உளறல்கள் | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.