Aran Sei

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளதால், பாஜகவினர் திரிணாமூலுக்கு செல்வது வாடிக்கையாகி இருப்பதால் தன் கட்சியினரை தக்கவைக்க பாஜக போராடிவருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக ஆளுநரைச் சந்தித்துப் புகார் அளிக்க பாஜகவின் மூன்றில் ஒரு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வராததால், கட்சி தலைமைக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைதிலி சிவராமன் (14 டிச. 1939 – 30 மே 2021) – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்

கடந்த வாரம் கட்சியின் துணைத் தலைவர் முகுல் ராய், மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறியதை அடுத்து, பல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அதே முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர் என ஊகங்கள் உள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காததை சுட்டிக்காட்டிய திரிணாமுல் காங்கிரஸ், “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஏன் ஆளுநரைச் சென்று சந்திக்கவில்லை. இதை பாஜக விசாரிக்க வேண்டும்” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களை உறுப்பினரான சுகேந்து சேகர் ராய் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்

”31 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திக்கலாம் என திட்டமிட்டிருந்த நிலையில், 51 பேர் பங்கேற்றனர். அவர்கள் தாமாக முன்வந்து பங்கேற்றனர். கலந்து கொள்ளாதது சம்பந்தப்பட்டவர்களின் முடிவு, அது கட்சியைப் பாதிக்காது என பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

திரிணாமுல் கட்சிக்கு மாறிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்மீது, கட்சி தாவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுப்பது உறுதி செய்யப்படும் என எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பாஜக ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவிற்கு தாவுவதற்கு அந்தக் கட்சி ஊக்கமளித்தது. நிலைமையை இன்னும் சிக்கலாக்குவது என்னவென்றால், பாஜகவிற்கு மாறிய இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் இன்னும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர்களில் ஒருவர் சுவேந்து அதிகாரியின் தந்தை சிசிர் அதிகாரி. கட்சித் தாவல் சட்டத்தின் ஞானத்தை சுவேந்து அதிகாரி முதலில் அவரது தந்தையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறியிருப்பதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்

கட்சி தாவல் என்பது கடந்த பத்தாண்டுகளாக மேற்கு வங்க அரசியலில் நடைபெற்றுக் கொண்டிருக்க ஒரு செயல். 2011 முதல் 2021 வரையிலான காலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12க்கும் அதிகமாக சட்டமன்ற உறுப்பினர்களும், சில இடது சாரி சட்டமன்ற உறுப்பினர்களும் திரிணாமுல் காங்கரஸ் கட்சிக்கு மாறியுள்ளனர்.

”2016 முதல் 2021 வரையிலான காலத்தில் காங்கிரஸின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும், 3 இடது சாரி சட்டமன்ற உறுப்பினர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்கள் யாரும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை.” என அரசியல் பார்வையாளர் பிஸ்வநாத் சக்ரவர்த்தில்  தெரிவித்துள்ளாக தி இந்து கூறியுள்ளது.

‘ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கிய ஊழலில் பாஜகவினருக்கும் தொடர்புள்ளது’ – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

”பாஜக கட்சி மாற்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்திய போது, இந்த சூழ்நிலையைப் பற்றிச் சிந்திருக்காது. இது தார்மீக உயர்நெறிகளை கொண்டிருக்கவில்லை. தகுதி நீக்கத்தை பொருத்தவரை அது சபாநாயகரின் முடிவாகும்” என அவர் கூறியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் உள்ல சட்டமன்ற உறுப்பினர்களை தவிர்த்து, கொல்கத்தா மாநகராட்சியின் முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி மற்றும் தலைவர்கள் ரஜிப் பானர்ஜி மற்றும் பிரபீர் கோசல் ஆகியோரும் கட்சி மாறுவது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸிற்கு  செய்திகளை அனுப்பி வருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்