மேற்கு வங்க மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவை சேர்ந்த சட்டபேரவை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்பு படையினரால் வழங்கப்படும் பாதுகாப்பை அக்கட்சியின் தேசிய தலைமை திரும்பப் பெற்றுள்ளது. இந்த முடிவு ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திற்கும் மேற்பட்ட பாஜக சட்டபேரவை உறுப்பினர்கள் இந்த பாதுகாப்பு ஏற்பாட்டை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது. அவர்களைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினார் இருப்பது பாஜகவுக்கும் மக்களுக்கு இருக்கும் நட்புறவை பாதிப்பதாக பாஜக சட்டபேரவை உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய மூத்த பாஜக தலைவர் ஒருவர், “பாஜக தலைவர்கள் பொது மக்களுடன் உரையாடுகையில், ஒன்றிய அரசின் பாதுகாப்பு படைகள் அவர்களை சூழ்ந்திருப்பது, கட்சிக்கு அவப்பெயரை விளைவிக்கும். இதற்கு முன்னர், ஒன்றிய அரசின் பாதுகாப்பு படைகளால் சூழப்பட்ட தாங்களின் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளை மேற்கு வங்க வாக்காளர்கள் கண்டிருக்கவில்லை. இது வங்காளிகள் வளர்த்தெடுத்த அரசியல் பண்பாட்டிற்கே முரணானது.” என்று விளக்கியுள்ளார்.
ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய பலரை வேட்பாளர்களாக்கியதுடன் ஒன்றிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பையும் வழங்கியது பாஜக. அவர்களில் சில பாதுகாவலர்கள் சந்தைகளில் பொருட்கள் வாங்கும் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டனர்.
Source; newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.