Aran Sei

‘விவசாயிகள் வாக்குகள் சிதறக்கூடாது’ – பாஜகவுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் விவசாயிகள் தலைவர்கள் பரப்புரை

மேற்கு வங்கத்தில் மதச்சார்பற்ற மற்றும் விவசாய ஆதரவு வாக்குகள் சிதறக்கூடாது என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர்களும் சமூக உரிமை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக அம்மாநிலத்தில் அவர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.

பாரதிய கிசான் யூனியனின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத்தும், சமூக ஆர்வலர் மேதா பட்கரும் மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம், சிங்கூர் மற்றும் கொல்கத்தாவில், பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடம் பரப்புரை செய்துள்ளனர்.

“டெல்லியில் அரசு எங்களுடன் பேசவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்குகளை கேட்கிறார்கள். நாங்கள் மக்களிடமும் விவசாயிகளிடமும் சொல்வது என்னவென்றால், நீங்கள் மூன்று விவசாயச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் பாஜக தலைவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.” என்று ராஜேஷ் திகாயத் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவான லண்டன் ஆர்ப்பாட்டம் : பிரிட்டிஷ் உள்துறையிடம் விவாதித்த இந்திய உள்துறை

பாஜக தலைவர்கள் விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று உணவு தானியங்களை சேகரிப்பது குறித்து கூறுகையில், “விவசாயிகளிடம் உணவு தானியங்களை சேகரிப்பவர்கள் முதலில் அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் மேதா பட்கர் கூறும் போது, “சிங்கூர் மற்றும் நந்திகிராமில், மக்கள் கார்ப்பரேட் நலன்களை எதிர்த்து போராடினார்கள். மேலும், தங்கள் நிலங்களை பாதுகாப்பதற்காக பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அதன் பிறகுதான், அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தில் இணைந்தன. பலவந்தமாக நிலம் கையகப்படுத்தலை செய்த இடது கட்சிகள் கூட, பலவந்தமான நிலக் கையகப்படுத்துதலை ஆதரிக்கும் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள்.” என்று நந்திகிராம் போராட்டத்தையும் விவசாயிகள் போராட்டத்தையும் தொடர்புப்படுத்தி பேசியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்