வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளங்களில் வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் தனது தனிப்பட்ட முறையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை “நான் பரிசீலிக்கிறேன், விரைவில் இதை விசாரிக்கத் தேதி தருகிறேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளனர்.
5 மாநில தேர்தல்களில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளின் இணையதளங்களில் வேட்பாளர்களின் குற்ற விவரங்களை வெளியிடுவதுடன் கூடவே, ஒவ்வொரு வேட்பாளர்களின் குற்ற விவரங்களையும், மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும். இதனை மீறுகின்ற கட்சியின் தலைவர் மீது அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் கூறியுள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.