Aran Sei

வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் பயன்தரும் – சர்வதேச விவசாயிகள் சங்கங்கள்

credits : the quint

“மோடி அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் பெருநிறுவன விவசாயத்திற்கு மட்டுமே பயனளிக்கும். ஆனால் விவசாய தொழிலாளர்களால் மட்டுமே இந்திய மக்களின் உணவு இறையாண்மையை உறுதிப்படுத்த முடியும். (போராட்டத்தை) விட்டுவிடாதீர்கள், உங்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் உள்ளனர்” என்று பிரேசிலின் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் இயக்கத்தைச் சேர்ந்த, கசியா பெச்சாரா, தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, டெல்லி எல்லையில் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு சர்வதேச அழுத்தத்தை தரும் வகையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் சம்யுக்த் கிசான் மோர்ச்சா (விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு) ஏழு மணி நேரம் இணைய வழி கருத்தரங்கை (Webinar) நடத்தியுள்ளது.

‘கைது செய்யப்பட்ட விவசாயிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்க’ – குடியரசுத் தலைவருக்கு விவசாயிகள் கடிதம்

இந்த கருத்தரங்கில் கலந்துக் கொண்ட அமேரிக்காவின் ஐக்கிய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனர் டொலொரஸ் ஹுயர்டா, ”பஞ்சாப் மற்றும் இந்திய விவசாயிகள் உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு குறு விவசாயிக்காகவும் போராடி வருகின்றனர். எனவே, நாம் அவர்களுக்கு பின்னால் அணிசேர்ந்து, இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற, அவர்களுக்காக நிதி திரட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘கலைந்து செல்லுங்கள்’ காவல்துறையின் எச்சரிக்கை – ‘பயமில்லை. எங்களுடன் மக்கள் இருக்கிறார்கள்’ விவசாயிகள் பதிலடி

”நாம் அவர்களுக்கு உறுதியான ஆதரவை அளிக்க வேண்டும்” என கூறியுள்ள அவர், ”போராடும் விவசாயிகள்  தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதையும், சித்திரவதை செய்யப்படுவதையும் நிறுத்த, இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” எனவும் டொலொரஸ் ஹுயர்டா கூறியுள்ளார்.

அந்த இணைய வழி கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமேரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள்  ஆகியோரிடத்தில், “எங்களுக்கு இப்போது உங்கள் ஆதரவு தேவை, அவர்களுக்கு (விவசாயிகள்) உதவ நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் உடனடியாக அமெரிக்கா தலையீட வேண்டும்” என கடிதம் எழுதுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘நாடாளுமன்ற முற்றுகை; 40 லட்சம் டிராக்டர்கள்; இந்தியா கேட் பூங்காவில் உழவு’ : தீவிரமாக களமிறங்கும் விவசாயிகள்

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் சங்க பிரதிநிதி ஒருவர், அமெரிக்கா மாதிரியான விவசாய தொழில், பெரும் நிலவுமடையாளர்களுக்கு ஆதரவாகவே இருக்கும் எனவும் இதனால் குறு விவசாயிகள் தங்களது நிலத்தை இழப்பர் எனவும் தெரிவித்துள்ளதாக தி இந்து –வின் செய்தி கூறுகிறது.

விவசாயிகள் போராட்டம் – விவசாய சங்க தலைவர் மீது துப்பாக்கிச் சூடு, கொலை முயற்சி

அமெரிக்காவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ள தேசிய விவசாயிகள் சங்கம், ”அமெரிக்க விவசாயிகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க தேசிய விவசாயிகள் சங்கம் போராடுகிறது, இந்திய விவசாயிகளும் அதையே செய்வதால், நாங்கள் அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறோம்” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

“போராட்டம் தொடர்கிறது, தீவிரமடையும் ” – விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

பிரேசிலின் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் இயக்கத்தைச் சேர்ந்த, கசியா பெச்சாரா, “மோடி அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் பெருநிறுவன விவசாயத்திற்கு மட்டுமே பயனளிக்கும். ஆனால் விவசாய தொழிலாளர்களால் மட்டுமே இந்திய மக்களின் உணவு இறையாண்மையை உறுதிப்படுத்த முடியும். விட்டுவிடாதீர்கள், உங்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

பர்னாலாவில் கூடிய லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் – டெல்லி போலீசுக்கு எச்சரிக்கை

”நாங்கள் தனியார் நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, விவசாயிகளே தனியார் துறை தான்” என கூறிய மகிளா கிசான் அதிகார் மஞ்ச் தலைவர், கவிதா குருகந்தி, ” சந்தையில் இருக்கும் அனைவரையும் தின்று விழுங்கும் ஏகபோக கொள்கையைக் கொண்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக தான் இருக்கிறோம். எங்களுக்கு முதலீடுகள் தேவை, சீர்திருத்தங்கள் தேவை, அது விவசாயிகளை வளப்படுத்த வேண்டும். ஆனால் இது பெரும் காரப்பரேட் நிறுவனங்களையே வளப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்