Aran Sei

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் – ட்ரம்ப் ஆதரவாளர் வீட்டில் ஆயுதம் பறிமுதல்

us protest

மெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்ட ட்ரம்ப் ஆதரவாளர்களில் ஒருவரிடமிருந்து வெடி குண்டு தயாரிக்கும் கையேடுகள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு சட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேப்பிடல் கட்டடத்தை முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.

ஜோ பைடன் பதவியேற்பு – அமெரிக்க தலைநகரில் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்தச் சம்பவமானது அப்போது நாடாளுமன்ற இருஅவைகள் கூடி, அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கப்படும் நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்தது. அதனை தடுக்கும்விதமாகக் கட்டடத்திற்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்களால் கலவலரம் வெடித்ததின் விளைவாக நான்கு பேர் உயிரிந்தனர். மேலும் காவல்துறையினர் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்த  வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கேப்பிடல் கட்டக் கலவரத்தில் கலந்துக்கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களில் ஒருவரும் ‘பிரவுட் பாய்ஸ்’ எனக் கூறப்படும் தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் டோமினிக் பெஸோலா (43) மற்றும் வில்லியம் பெப்பி (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை – கண்டனம் தெரிவித்த இந்திய அரசு

அதில், நியூயார்க் ரோசெஸ்ட்ரா பகுதியில் அமைந்துள்ள அவர் வீட்டிலிருந்து வெடி குண்டு தயாரிக்கும் கையேடுகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள், கைப்பற்றப்படுத்தாக அமெரிக்க சட்ட அமலாக்கத்துறை கைப்பற்றியதாக வழக்கறிஞர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இதுவரை இந்த வழக்கில் ட்ரம்ப் ஆதரவாளர்களான 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டோமினிக் பெஸோலா மீது நாட்டின் உடமைகளை கொள்ளயடித்த குற்றம், அதிகாரிகளைத் தாக்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க பத்திரிக்கையாளர் டேனியல் பேர்ல் கொலை வழக்கு – குற்றவாளியை விடுவித்தது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

மேலும், போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, கேப்பிடல் கட்டத்தில் டோமினிக் பெஸோலா காவல்துறையினர் ஒருவரை வைத்து, ஜனசல் கதவை உடைத்து முதலாவது நபராகக் கட்டடத்திற்குள் நுழைந்துள்ளார். மேலும் காவலர் ஒருவரை செனட் சேம்பர் அருகே விரட்டியதும், அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை உள்ளே வர இவர் அனுமதித்தது குறித்து சாட்சியங்கள் பதிவான காணொளியைக் குறிப்பிட்டு வழக்கறிஞர்கள் அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டை முன்வைத்து வாதிட்டனர் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  பதிவு செய்துள்ளது.

இந்க வழக்குகுறித்து தகவல்கள் அளிப்பவர்களுக்கு பத்தாயிரம் டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சிஐஏ அறிவித்துள்ளதா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்