Aran Sei

‘மேகதாதுவில் அணை கட்டினால் சட்டப்படி தடுப்போம்’ – தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

மேகதாதுவில் தடுப்பணையை கட்டுவதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜா பொம்மைய்யா கூறியதற்கு எதிர்வினையாக அணை கட்டுவதை தடுத்தே தீருவோம் என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகத்திற்கு எந்தெந்த இடத்திலிருந்து எவ்வளவு நீரை உச்ச நீதிமன்றம் தரவேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது. திட்டவட்டமாக உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிற நீரை இடைமறித்து மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்வது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே புறக்கணிப்பது போன்றது” என்று தெரிவித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

மேலும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது, அது தேசிய சொத்து என்று தீர்ப்புரைத்திருப்பதை கர்நாடக மாநில அமைச்சர் அறிந்திருப்பார் என்று கருதுவதாக அறிக்கையில் துறைமுருகன் கூறியுள்ளார்.

இவ்வளவையும் மீறி அணையை கட்டுவோம் என்று சொல்வது, நடுவர் மன்ற தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கமாட்டோம் என்று சொல்வது போல் தெரிவதாகவும்,. இது ஒரு ஜனநாயக நாடு. இத்தகைய போக்கு ஒரு மாநிலத்திற்குள் வளர்வதை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருப்பதும் நல்லதல்ல என்றும், அண்டை மாநிலத்தின் உறவிற்கும் இது உகந்ததல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கறுப்பின கால்பந்து வீரர்களுக்கு எதிரான நிறவெறியூட்டும் பதிவுகள் : வெட்கக்கேடான செயல் என இங்கிலாந்து பிரதமர் கண்டனம்

“மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் சொல்வதைப் போல், எந்த நிலையிலும் சட்டப்படி அதை தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கும் எங்களுக்கு உரிமை உண்டு.” என்று  தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்