வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதைப் போல், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை திரும்பப் பெறாவிட்டால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
“சிஏஏ அரசியலமைப்புக்கு எதிரானது, பாஜக அரசாங்கம் இந்தச் சட்டத்தை திரும்பப் பெறவில்லை என்றால், நாங்கள் தெருக்களுக்கு வருவோம், மற்றொரு ஷாஹீன் பாக் இங்கே வரும்,” என்று ஒவைசி உத்தர பிரதேசத்தில் உள்ள பாரபங்கியில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
விவசாயிகளை ஒன்றிய அரசை நம்பவில்லை, நாடாளுமன்றம் தொடங்கி, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதாஅறிமுகமாகட்டும் அதன்பின் முடிவு எடுப்பதாகக் கூறியுள்ளார்கள்” எனத் ஒவைசி தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு விவசாயிகளை திருப்திப்படுத்துவதற்காக விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராமணர்கள், யாதவர்கள், குர்மிகள் ஆகியோர் ஒன்றிணைவதன் மூலம் பலம் பெற முடியும், உங்களால் ஏன் முடியாது? வாக்காளர்கள் எல்லோரும் ஒன்றிணையுமாறு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கேட்டுக்கொண்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.