Aran Sei

“மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக கூட்டணியை தோற்கடிப்போம்” – தேர்தல் அறிக்கை வெளியிட்டு திருமாவளவன் பேச்சு

மிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று விழுப்புரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில்,   அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவை சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவோம் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து போராடுவோம்.

மொழிவழித் தேசியம் மாநில உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றை பாதுகாத்து அரசியலமைப்புச் சட்டம் முன்மொழியும் கூட்டாட்சி முறையைப் பாதுகாக்கப்படும்

ஒரே தேசம் ஒரே கல்வி என்ற தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம். கல்வியை மாநிலப் பட்டியலில் இடம் பெறச் செய்யப்படும்.

தீவிரவாதி என்று கைது செய்யப்பட்டவர் மர்ம மரணம் – உடற்கூராய்வு அறிக்கையைத் தர காவல்துறை மறுப்பு

பெண்களுக்கு சட்டமியற்றும் அவைகளில் 50 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்க வழிவகை செய்யப்படும்.

ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை தடுத்து, வாழ்வாதாரங்களையும் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.

கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவை கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும்.

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட தொடர்ந்து போராடுவோம். மதுவிலக்கை தேசியக் கொள்கையாக வளர்த்தெடுக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சிறையில் இருந்து தேர்தலில் போட்டியிடும் சிஏஏ போராட்டக்காரர் : மகனுக்காக பரப்புரை செய்யும் 83 வயது தாய்

ஐநா மன்றத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கான சிக்கலைத் தீர்க்க தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்பதை வலியுறுத்தித் தொடர்ந்து போராடுவோம்.

தலித்துகள் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கான இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக் கட்டும் தீய நோக்கோடு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் தனியார் மயப்படுத்தல் போன்ற அனைத்து வகையான சதி முயற்சிகளை முறியடித்து சமூகநீதியை பாதுகாப்போம்.

சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “சமூகநீதி மண்ணாக உள்ள தமிழகத்தில் சாதி, மதத்தின் பெயரால் ஆதாயம் தேட முயலும் பாஜகவின் திட்டத்தை அம்பப்படுத்துவோம். பாஜக வெறும் அரசியல் கட்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோட்பாடுகளை ஏற்று நடக்கும் அமைப்புதான் பாஜக” என்று தெரிவித்துள்ளார்.

சாதி மறுப்பு திருமணம் செய்தவரின் வீடு தாக்கப்பட்ட விவகாரம் – 7 பேர் கைது

மேலும், ”ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு சனாதன அமைப்பு. வெறுப்பு அரசியலை மூலதனமாக கொண்டு மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த வேண்டும் என்பதே அதனுடைய திட்டமாக உள்ளது. அதன் அரசியல் பிரிவாக பாஜக செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் இஸ்லாமியர்கள், கிருத்துவர்களை தனிமைப்படுத்தும் நோக்கோடு செயல்படுகிறது” என்று கூறியுள்ளார்.

மக்கள் சாதி உணர்வுடன் இருக்க வேண்டும் என பாஜக என்னுகிறது. வட மாநிலங்களில் எந்நேரமும் சமூக பதற்றம் நிலவிக்கொண்டே இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அப்படியான பதற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதற்கு கலைஞர், ஜெயலலிதாதான் காரணம். இன்றைக்கு இருவரும் இல்லை என்ற இலையில் அதிமுக முதுகில் ஏரி பாஜக சவாரி செய்கிறது. அதனால்தான் விசிக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ளது. அதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி எங்கள் கூட்டணி என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்