Aran Sei

‘அதிகாரப் பேச்சை தவிர்க்காவிட்டால் பாஜக தலைவர்களின் நாக்கை அறுப்போம்’ – தெலுங்கானா முதலமைச்சர்

நெல் கொள்முதல் செய்ய மாட்டோம் என்று ஒன்றிய அரசும், மாநில பா.ஜ.க. தளர்வான பேச்சைத் தவிர்க்கவும். எங்களைப் பற்றி தேவையற்ற கருத்துக்களை தெரிவித்தால் உங்கள் (மாநில பாஜக தலைவர்கள்) நாக்கை அறுப்போம் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் நேற்று நிருபர்களுக்குப் ேபட்டி அளித்தபோது, எங்கள் மாநிலத்திலிருந்து நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசுக்கு விருப்பம் இல்லாதபோது நாங்கள் ஏன் நெல்லை உற்பத்தி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு நெல் கொள்முதல் செய்யாமல் இருப்பதால்தான் நெல் பயிரிடுவதை கைவிடுங்கள், மாற்று பயிருக்குச் செல்லுங்கள் என்று விவசாயிகளிடம் வேளாண் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

நாங்கள் விவசாயிகள் போாரட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறோம் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும் எதிர்க்கிறோம். எங்கள் மாநிலத்திலிருந்து விளையும் நெல் முழுவதையும் ஒன்றிய அரசு கொள்முதல் செய்யாதவரை நாங்கள் விட மாட்டோம்.

ராமநாதபுரம் மீனவர் நிவாரண தொகையில் கடன் பிடித்தம் நிறுத்திவைப்பு – சு.வெங்கடேசன் நடவடிக்கை

ஒன்றிய அரசால் கொள்முதல் செய்யப்படாத ஒன்றை விவசாயிகள் பயிரிடச் சொன்னதற்காக பாஜகவைச் சேர்ந்த பாண்டி சஞ்சய்யை சந்திரசேகர் ராவ் சாடினார். “நெல் கொள்முதல் செய்ய மாட்டோம் என்று ஒன்றிய அரசும், மாநில பா.ஜ.க. தளர்வான பேச்சைத் தவிர்க்கவும். எங்களைப் பற்றி தேவையற்ற கருத்துக்களை தெரிவித்தால் உங்கள் (மாநில பாஜக தலைவர்கள்) நாக்கை அறுப்போம்” என்று சந்திரசேகர் ராவ் கூறியதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ஒருமுறைகூட பெட்ரோல், டீசலுக்கு வாட் வரியை உயர்த்தவில்லை. அப்படி இருக்கும் போது நாங்கள் ஏன் வாட் வரியை குறைக்க வேண்டும். இதுபோன்று பேசுவதை பாஜக தலைவர்கள் நிறுத்த வேண்டும் ஒன்றிய அரசு எங்கள் மாநிலத்திலிருந்து நெல் கொள்முதல் செய்ய பாஜக தலைவர்கள் உதவ வேண்டும்.

நெல் கொள்முதல் செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். தேவைபட்பட்டால் டெல்லியில் தெலங்கானா எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், முதல்வராகிய நான் அனைவருமே தர்ணா போராட்டத்திலும் ஈடுபடுவோம்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் மிகக்குறைவாகவே இருந்து வருகிறது, ஆனால்,ஒன்றிய அரசோ செஸ் வரிஎன்ற பெயரில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது.

‘திரிபுராவில் இந்துத்துவவாதிகளால் தாக்கப்படும் இடதுசாரிகள், இஸ்லாமியர்கள்’ – நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் அறிவித்த திருமாவளவன்

கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் பேரல் 105 டாலரை தொடவே இல்லை, ஆனால், ஒன்றிய அரசு மட்டும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

நாங்கள் வாட் வரியை உயர்த்தவில்லை. ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதால், வரியை குறைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை. எந்த முட்டாள் வாட் வரியை குறைக்கக் கூறினார், எந்த முட்டாள் உயர்த்தினார்களோ அந்த முட்டாள் குறைக்கட்டும் என்று தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

 

Source: India today

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்