Aran Sei

‘நாடு முழுவதும் உள்ள மதரசாக்களை மூடுவோம்’ – தேர்தலுக்காக மதவாத பிரச்சாரத்தை தொடங்கிய உ.பி. அமைச்சர்

டவுளின் ஆசிர்வாதம் இருந்தால் நாடு முழுவதிலும் உள்ள மதரசாக்களை மூடுவோம் என உத்தரப்பிரதேச இணை அமைச்சர்  ரகுராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரைகளை கட்சிகள் தொடங்கி விட்டன. மீண்டும் ஆட்சி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், மதக்கலவரங்கள் அதிகம் நடைபெற்ற அலிகர் நகருக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் ரகுராஜ்சிங் வந்திருந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘என்னை கடவுள் ஆசீர்வதித்தால் நான் நாட்டின் அனைத்து மதரசாக்களையும் மூடிவிடுவேன். ஏனெனில், மதரசாக்கள் ஒரு தீவிரவாதிகள் கூடாரமாக உள்ளது. இவற்றில் தீவிரவாதப் பயிற்சிகளும் அளிக்கப்படுவதால் அதில் படிப்பவர்கள் தீவிரவாதிகளாகி விடுகின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

இக்கருத்துக்கு காங்கிரஸ் கடும்  எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச செய்தித் தொடர்பாளர் சுரேந்திராசிங் ராஜ்புத், ”எந்த மதரசாவில் நாதுராம் கோட்சே பயின்று, நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார் என்பதையும் அமைச்சர் வெளியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source: the hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்