Aran Sei

அர்ஜுன மூர்த்தி மீண்டும் பாஜகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் – எல்.முருகன்

Image Credits: The News Minute

ஜினி எடுத்த முடிவுக்காக அவரைப் பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று பாஜகவில் இருந்து விலகி ரஜினியுடன் இணைந்த அர்ஜுன மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதற்காக ஜனவரி மாதம் கட்சி துவங்க இருப்பதாகத் தெரிவித்த நடிகர் ரஜினி காந்த் “கட்சி தொடங்கவில்லை, அரசியலுக்கு வர முடியவில்லை, மன்னியுங்கள்!” என்று நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ரஜினியை கட்சி ஆரம்பிக்கக் கூறி அழுத்தம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் – திருமாவளவன்

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன மூர்த்தி, “ரஜினிகாந்த், மிகவும் மன உளைச்சலில் உள்ளார். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவர். இப்போது கட்சி தொடங்க முடியவில்லை என மன வருத்தத்தில் உள்ளார். ரஜினி எடுத்த முடிவுக்காக அவரைப் பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

தன்னை அறிமுகம் செய்யும்போது ரஜினி சொன்னது போலவே மக்களுக்குச் சேவைகளை செய்வேன் எனவும் ரஜினியின் ஆசைப்படி மக்களுக்கு நல்லது செய்ய நான் பாடுபடுவேன் எனவும் அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.

“போகிறேன், வர மாட்டேன் ” – அரசியலுக்கு முழுக்கு போட்ட தமிழருவி மணியன்

“உடல் நலம் குறித்து மருத்துவர்கள் சொன்ன காரணத்தால் கட்சியின் வேலைகளை செய்ய முடியாமல் அப்படி ஒரு அறிக்கையை ரஜினி வெளியிட்டுள்ளார். மற்றபடி நல்லாட்சி அமைய வேண்டும் என்பதில் அவர் மக்களில் ஒருவராகத் துணை நிற்பார். நான் அவருடன் என்றும் தொடர்ந்து செயல்படவே ஆசைப்படுகிறேன்” என்று அர்ஜுன மூர்த்தி கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள அர்ஜுன மூர்த்தி மீண்டும் பாஜகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் எனத் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்