Aran Sei

உத்திரபிரதேசத்தில் தீண்டாமை கடைபிடித்த பள்ளி தலைமையாசிரியர் – பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம்

த்திரபிரதேச மாநிலம் அமேதி பகுதியில் உள்ள பன்பூர்வா அரசு தொடக்கப்பள்ளியில், பட்டியலின மாணவர்கள்மீது தீண்டாமை கடைபிடித்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அப்பள்ளியின் தலைமையாசிரியை குசும் சோனி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்மீது பட்டியலினம் மற்றும் பழங்குடியினம் வன்கொடுமை (தடுப்பு)ச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

முறையாக சாலை வசதி கூட கிடைக்கப்பெறாத பன்பூர்வா அரசு தொடக்கப்பள்ளியில் 38 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 23 பேர் பட்டியல் வகுப்பினர், 11 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 4 பேர் பொதுப் பிரிவினர்.

பள்ளியில் மதிய உணவு வழங்கும்போது, நாங்கள் (பட்டியலின மாணவர்கள்) தனியாக அமர வைக்கப்பட்டுள்ளோம்… தலைமை ஆசிரியை எப்போதும் தாமதமாக வருவார். ஒரு வேளை அவர் மிகவும் தாமதமாக வந்தால் அன்றைய தினம் எங்களை அடிப்பார். நாங்கள் சிறு தவறு செய்தாலும் அதிகமாக அடிக்கப்படுகிறோம்” என அந்த பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமி ஜோதி தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார் அளித்த விமானப்படை அதிகாரிக்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை செய்த விவகாரம் – கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம்.

பள்ளியில் நடக்கும் தீண்டாமை மற்றும் தாக்கும் சம்பவம்குறித்து மாணவர்கள் புகாரைத் தொடர்ந்து, இதனை அவர்களது பெற்றோர்கள் கிராம நிர்வாக அதிகாரி வினய் குமார் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

சிறுமி ஜோதியின் தந்தை சோனு, மற்றோரு சிறுவனின் தாத்தா ஜக்நாராயன் உள்ளிட்ட கிராம மக்கள் பள்ளிமீது புகார் தெரிவித்ததாக குறிப்பிட்ட வினய் குமார், புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பது உண்மை தானா என்று அறிந்துகொள்ள பள்ளிக்கு சென்றேன். அங்குத் தலைமையாசிரியை காணவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புகாரளித்த விமானப்படை அதிகாரி – புகாரைத் திரும்பப்பெற நிர்வாகம் மிரட்டியதாக குற்றச்சாட்டு

இது தொடர்பாக தலைமையாசிரியை சோனி மீது உள்ளூர் காவல்நிலைய அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள வினய் குமார், “என்னிடம் புகார் தெரிவித்ததற்காக ஜக்நாராயணின் பேரன் மற்றும் ஜோதியின் சகோதரி திவ்யான்ஷியும் தாக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெரிவித்துள்ள மாவட்ட கல்வி அதிகாரி அரவிந்த் பதக், ”நான் பள்ளிக்கு சென்று, குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களிடம் பேசினேன். தலைமையாசிரியையின் உத்தரவின் பெயரிலேயே மதிய உணவின்போது, பட்டியலின மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதன் அடிப்படையில் தலைமையாசிரியை குசும் சோனி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்மீது பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை (தடுப்பு)ச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

“ஒரு நபர் கட்சி மாறுவதால் இடதுசாரிகள் வலுவிழக்க மாட்டார்கள்” – கண்ணையா குமார் காங்கிரஸில் இணைந்தது குறித்து மாணவர் சங்க முன்னாள் தலைவர் கருத்து

குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தலைமையாசிரியை, “நான் இந்தப் பள்ளியில் நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என்மீது கூறப்படும் புகார்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது. இவை அனைத்தும் நான் பள்ளிக்கு ஒருநாள் தாமதமாக வந்தால் தொடங்கியது” தெரிவித்துள்ளார்.

Source : The Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்