Aran Sei

போராட்டத்தின் போது டெல்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டோம் – கேரள எம்பிக்கள் மக்களவையில் குற்றச்சாட்டு

கேரள மாநிலத்தில் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள கே ரயில் சில்வர்லைன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது டெல்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டோம் என கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுரேஷ், “இன்று (மார்ச் 24) காலை 10.45 மணிக்குக் கேரளாவைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 பேர், விஜய் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாக வந்த போது, டெல்லி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டோம்” என கூறியுள்ளார்.

“நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று அவர்களிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் நாங்கள் முழக்கங்கள் எழுப்புவதை சுட்டிக்காட்டினர். எங்களுக்கு முழக்க எழுப்ப உரிமை உள்ளது என்று நாங்கள் கூறிய பிறகும், அவர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர், வன்முறையை பிரயோகப்படுத்தினர்” எனத் தெரிவித்துள்ளார்.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

சில்வர்லைன் திட்டம் தொடர்பாக கேரள அரசு ஆய்வு நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடியை கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சம்பவம் கெடுவாய்ப்பானது என தெரிவித்துள்ள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த என்.கே பிரேமச்சந்திரன், “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது காவல்துறையினருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், எங்களை நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை” என கூறியுள்ளார்.

“இது எங்களின் உரிமைகளை கேள்வி எழுப்புகிறது. அவர்கள் எங்களை நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளே வந்து தடுத்தனர். நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்து எம்.பிக்களை தடுக்க டெல்லி காவல்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கை சீர்செய்ய ஒன்றிய அரசு தலையிட வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கடிதம்

இது தொடர்பாக பதிலளித்துள்ள மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “இது தொடர்பாக அவர்கள் (காவலர்கள்) உடன் கலந்தாலோசித்து விட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசுவதாக உறுதியத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகாரும் கிடைக்கப்பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கே.சி. வேணுகோபால், “அமைதியான முறையில் போராட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.” எனக் கூறியுள்ளார்.

ஹிஜாப் விவகாரம்: அனைத்து மத தலைவர்களின் கூட்டத்தை கர்நாடக அரசு கூட்ட வேண்டும் – கர்நாடக முன்னாள் முதல்வர் வேண்டுகோள்

இதற்குப் பதிலளித்துள்ள மாநிலங்களவை சபாநாயகர் எம். வெங்கையா நாயுடு, சம்பவம் குறித்து முழுத் தகவல்களையும் அளித்தால், உள்துறை அமைச்சகத்திடம் இது குறித்து புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்