சுதந்திரமான, ஒடுக்குதல்களற்ற நாட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் பாடுபடக்கூடியவர்கள் இந்த தேசத்திற்கு எதிரானவர்கள் என்று சித்தரிக்கப்படுவதாக டெல்லி கலவர வழக்கில் கைதாகி தற்போது பிணையில் விடுதலையாகியுள்ள மாணவச் செயற்பாட்டாளர் தேவங்கனா கலிதா கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 17 அன்று, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து டெல்லி கலவரக்கில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத (நடவடிக்கைகள்) தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா, ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிறையிலிருந்து பிணையில் வெளிவந்துள்ள தேவங்கனா கலிதாவிடம் திஹார் சிறை அனுபவங்கள் மற்றும் சுதந்திரம் குறித்து தி இந்து நடத்திய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்
கிட்டத்தட்ட ஓராண்டுகிற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது பிணையில் வந்திருக்கிறீர்கள், இதுகுறித்து தற்போது எவ்வாறு உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “நிச்சயமாக இது உண்மையிலேயே விடுதலை தான், எனக்கோ நடாஷாவிற்கோ என்று மட்டுமல்ல. நாங்கள் சிறையிலிருந்த கடந்த ஓராண்டாக எங்களுக்கு ஆதரவளித்த எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்குமானது. குறிப்பாக எங்கள் மீது போடப்பட்ட அதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குல்பிஷா வை போன்று, எண்ணற்றோர் தாங்கள் என்ன குற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுளோம் என்பதே தெரியாது. இப்படியானவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவது தொடருவதால், எங்கள் ஜாமீனை நாங்கள் சுதந்திரம் போல் உணரவில்லை.” என்று அவர் தெரிவித்துள்ளதாக தி இந்து கூறுகிறது.
மேலும், டெல்லி உயர்நீதிமன்றம் உங்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டும் 36 மணிநேர காலதாமதத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து ? என்ற கேள்விக்கு, “அந்த 36 மணிநேரங்கள் அழுத்தம் தரக்கூடியதாக இருந்தன. எங்களுக்கு ஜாமீன் கிடைத்தாலும் கூட விடுதலை பெறுவது எளிதானதில்லை என்று நாங்கள் எதிர்பார்த்தது தான். எங்களுக்குப் பிணை வழங்கியதற்காக உயர்நீதிமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் கீழ் கைது செய்யப்பட்டால் பிணை பெறுவது எவ்வளவு கடினமானது என்று அறிய நேர்ந்தது” என்று தேவங்கனா குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
இதேபோன்று, உங்கள்மீதும் மற்றவர்களின் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு வருடமாக உதவியற்ற நிலையில் இருப்பதாக எண்ணியநீங்கள், இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தீர்களா? என்ற கேள்விக்கு, வரலாறுரீதியாக உபா சட்டம் போன்ற சட்டங்கள் பிணை கூட வழங்காது, போராட்டக்காரர்களையும், விளிம்பு நிலை சமூக மக்களையும் ஒடுக்குவதற்காகவே பிறப்பிக்கபடுவதாக கருதுகிறேன். வழக்கு விசாரணை நிலையில் நடைபெறும் போதும் கூட தண்டனை விதிக்கப்படுவது போன்று உள்ளது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்பக்கூடியவர்களை நீதித்துறை காத்து நிற்கும் என்ற நம்பிக்கை கொண்டுடோம் என்று அவர் தெரிவித்துள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
மேலும், திஹார் சிறையில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது, எவ்வாறு உங்களை பாதித்தது? என்ற கேள்விக்கு, “சிறைத்துறை நடைமுறைகள் மனிதநேயமற்ற அனுபவமாக மாற்றப்படுகிறது. அதிகாரிகள் கைதிகளின் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் மீது முழுமையான அதிகாரத்தைக் கொண்டுள்ளனர் மற்றும் கைதிகளின் அடிப்படை சுதந்திரங்களை மறுக்க தன்னிச்சையாக அவர்களின் சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இது உள்கட்டமைப்பில் உள்ள பற்றாக்குறை. இது தனிப்பட்ட முறையில் என்னை பாதித்தது. ஆனால் இது போன்று பல பிரச்சனைகள் உள்ளன. நான் பார்த்த மற்றும் அனுபவித்த பல விஷயங்கள் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
அதுமட்டுமல்லாது, இது போன்ற நடவடிக்கைகளால் தொழிலாள வர்க்கம், தலித் மற்றும் முஸ்லீம் சமூகங்களே பெரும்பாலும் பாதிப்படைந்துள்ளதாகவும், சிறையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப் பொதுநல மனுவைத் தாக்கல் செய்து முயற்சிகள் மேற்கொண்டதாகவும், இந்தியாவில் சிறையிலுள்ள 70% விசாரணைக்கைதிகள், மிகவும் பாதிக்கப்படக்கூடிய விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இது
ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகவும் குரலெழுப்பும் அறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான் சிறையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது என்று உபா சட்டத்தில் கைதாகி பிணையில் வெளிவந்துள்ள்ள தேவங்கனா தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.