Aran Sei

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சிரஞ்ச் பாற்றக்குறை – பலமுறை எடுத்துக் கூறியும் அரசு கண்டுகொள்ளவில்லை என சிரஞ்ச் தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு

ந்தியாவில் மருத்துவ தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் சிரஞ்ச்க்கு  பெரியளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என இந்துஸ்தான் சிரஞ்ச் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ராஜீவ் நாத் தெரிவித்துள்ளார்.

சிரஞ்ச் பற்றாக்குறை தொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசுக்கு பல முறை அறிவித்தும் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசின் கவனக்குறைவால் நாட்டின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதோடு, சர்வதேச சந்தையில் இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர்கள் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக ராஜீவ் நாத் குறிப்பிட்டுள்ளார்.

”கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக அரசுக்குக் கடிதம் எழுத்தப்பட்டது. ஆனால் அரசு பதிலளிக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் அமைப்பிற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடிதம் எழுதப்பட்டது. அவர்கள் ஜூலை மாதத்தில் இருந்து ஆர்டர்கள் வழங்க தொடங்கினார்கள். ஏப்ரலில் எழுதிய கடிதத்திற்கு அக்டோபரில் பதிலளித்த அரசு, டிசம்பர் மாதத்தில் தான் ஆர்டர் வழங்கத் தொடங்கியது.” என ராஜீவ் நாத் தெரிவித்துள்ளார். மூன்றுவகையான சிரஞ்ச்களை ஏற்றுமதி செய்யக் கூடாது என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்