Aran Sei

கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தியுங்கள் – மு.க.ஸ்டாலின் தேர்தல் வியூகம்

Image Credits: PTI

‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற பெயரில் கிராமங்கள்தோறும் கூட்டம் நடத்த வேண்டும் எனத் திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுள்ளது. தேர்தல் பணிகள், பிரச்சாரக் கூட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “தேர்தலுக்குப் பணம் முக்கியம்தான்; பணம் மட்டுமே முக்கியமல்ல! பணம் கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்றால், பணம் கொடுத்த பல தேர்தல்களில் அதிமுக தோற்றும் உள்ளது. அப்படியானால் அதையே காரணமாகச் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கு துரோகம் செய்த அதிமுக – ஸ்டாலின் கண்டனம்

ஏற்கெனவே ‘தமிழகம் மீட்போம்’ என்று மாவட்ட அளவிலான கூட்டங்களில் நான் பங்கேற்று வருகிறேன். அது மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும், திமுக மீது பலத்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. அதேபோல்தான், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற இந்தக் கூட்டமும் நடத்தப்பட வேண்டும்” என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

எழுவர் விடுதலையைத் தடுத்து வைத்திருப்பது அநீதி – ஸ்டாலின் குற்றச்சாட்டு

“இந்தக் கூட்டத்தை மாவட்டச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, கிளை, பகுதிச் செயலாளர்கள் நடத்த இருக்கிறீர்கள். டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து தொடர்ந்து பத்து நாட்கள் உங்கள் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு, பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கு மேல்தான் என்று நாம் உறுதி எடுத்தாக வேண்டும். ‘மிஷன் – 200’ என்ற இலக்கை நோக்கி நாம் சென்றாக வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகத்தைச் சவக்குழிக்குள் தள்ளும் – ஸ்டாலின்

இன்று முதல் ஒவ்வொரு 24 மணி நேரமும் உழைத்தால்தான் 200க்கும் மேல் என்பது சாத்தியம். நம்மால் முடியும்! நம்மால் மட்டும்தான் முடியும்!” என்று கூறி ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்