கொரோனா தொற்று அதிகரித்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள கடியன் பகுதியின் விவசாயிகள் சங்க தலைவர் ஹர்மீத் சிங் , பஞ்சாப் அமைச்சர் ஒருவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அரசு ஆய்வகத்தில் கொரோன தொற்று இருந்ததாகவும் ஆனால் தனியார் ஆய்வகத்தில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்ட களத்தில் வீடுகட்டிய விவசாயிகள் – சட்ட விரோதமென காவல்துறை வழக்குப் பதிவு
மேலும் ஹர்மீத் சிங் , ” எந்த முடிவுகளை நாங்கள் நம்ப வேண்டும் , கொரோனா பரவினாலும் எங்கள் போராட்டம் முன்னைவிட 100 இடங்களில் அதிகமாகத் தொடரும்” என்றும் தெரிவித்துள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வேளாண் சட்டம்குறித்து கேள்வி எழுப்பிய ஹர்மீத் , “கொரோனா தொற்று பரவுகிறது என்றால் கொரோனா காலத்தில் ஏன் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் தேவை என்ன ? ” என்று கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடியன் பகுதியின் விவசாயிகள் சங்க தலைவர் ஹர்மீத் சிங், எங்கள் போராட்டங்களில் எண்ணிக்கையைக் குறைக்கும் எண்ணமில்லை என்றும் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
தவுகண்டா பகுதியின் விவசாய சங்க பொது செயலாளர் , “ஷாகின் பாக் போராட்டத்தின்போது எப்படி பயமுறுத்த நினைத்தார்களோ அதேபோல இப்போதும் செய்ய நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.