Aran Sei

சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

மிழ்நாட்டில் சாதிவெறியால் பட்டியலின இளைஞர் கோகுல் ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து, சாதிய வன்முறைகளைத் தடுக்க தனிச் சட்டம் அவசியம் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் இன்று (மார்ச் 22) தெரிவித்துள்ளார்.

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு – முதன்மை குற்றவாளி யுவராஜிக்கு 3 ஆயுள் தண்டனை

சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் முதல் குற்றவாளியான யுவராஜிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

“இந்நிலையில் எங்களது பழைய கோரிக்கையை இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம். இது நீதித்துறை அல்லது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளை விட வழக்கறிஞர் ப.பா.மோகனின் “தொடர்ச்சியான தனிநபர் சட்டப் போராட்டத்தின்” வெற்றி என்பதை இந்த அரசுக்கு நாங்கள் சொல்ல விரும்புகிறோம் என்று சாமுவேல் ராஜ் கூறியுள்ளார்.

கோகுல்ராஜ் வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு உரிய ஊதியத்தையும் பாதுகாப்பையும் வழங்குக – தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

மேலும், இந்த பிரச்சனைக்குத் தமிழ்நாடு அரசு என்ன செய்தது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். வழக்கறிஞர் ப.பா.மோகன் இந்த சட்ட போராட்டத்தை நடத்தாவிட்டால் என்ன நடந்திருக்கும்? அதனால்தான் நாங்கள் சாதிய வன்முறைகளைத் தடுக்க தனிச் சட்டம் கோருகிறோம்,” என்று சாமுவேல் ராஜ் கூறியுள்ளார்.

“2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உசிலம்பட்டி விமலாதேவி சாதி ஆணவக் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சாதி மாறி திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களைப் பாதுகாக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கூறியது. மேலும் இத்தகைய தம்பதிகளை பாதுகாக்க 8 அம்ச வழிகாட்டுதல்களை சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. ஆனால் தமிழ்நாடு அரசு இதனையொட்டி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று சாமுவேல் ராஜ் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட கோகுல்ராஜும் மாதொருபாகனும் – ஜெ.பாலசுப்பிரமணியம்

“2015 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவைத்தலைவர் சௌந்தரராஜன் கொண்டு வந்த “கௌரவம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் கொலை, குற்றம் செய்வதை தடுத்தல் 2015 மசோதா”வைத் தமிழ்நாடு அரசு கணக்கில் எடுத்துக்கொண்டு சாதி ஆணவ கொலைகளைத் தடுக்கும் சட்டத்தை மீண்டும் இயற்ற வேண்டும்” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் கூறியுள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்