Aran Sei

அம்பேத்கர், பெரியார் கருத்துக்களை மேற்கோள் காட்டி பதிவிட்ட கன்னட நடிகர் – உணர்வுகளை புண்படுத்தியதாக பிராமணர்கள் சங்கம் புகார்.

ம்பேத்மர் மற்றும் பெரியாரின் கருத்துக்களை மேற்கொள் காட்டி கன்னட நடிகரும், சமூக ஆர்வலருமான சேத்தன் குமார் பதிவிட்ட ட்விட்டர் பதிவு, பிராமணர்களின் உணர்வுகளை புண்படுத்தியிருப்பதாக கூறி காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு காவல்துறை ஆணையர் கமல் பந்திடம், பிராமண வளர்ச்சிக் குழுத் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி அளித்திருக்கும் புகாரில், ”சேத்தன் குமாரின் கருத்தால் பிராமண சமூகத்தின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன, எனவே அவர் இது தொடர்பாக அவர் மன்னிப்பு கோர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் சேத்தன் குமார் தனது ட்விட்டர் பதிவில், “பிராமணியம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தும் ஆகியவற்றின் உணர்வுகளை மறுப்பதாகும்… பிராமணியத்தை நாம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் – அம்பேத்கர்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “எல்லாரும் சமமாக பிறந்தாலும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் மற்றவர்கள் அனைவரும் தாழ்ந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கூறுவது முட்டாள்த்தனம் – பெரியார்” என மேற்கொள்களை காட்டி பதிவிட்டுள்ளார்.

புகாரைத் தொடர்ந்து சேத்தன் குமார் மீது முதல் தகவல் அறிக்கை பதியபட்டிருப்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை.

சேத்தன் குமார் கருத்துக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆணையர் உறுதியளித்திருப்பதாக சச்சித்தானந்த் மூர்த்தி தெரிவித்தார்.

புகார் தொடர்பாக காவல்துறையினரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்ல என தெரிவித்த நடிகர் சேத்தன் குமார், “கருத்துக்கள் உண்மையானவை, நான் உண்மையை மட்டுமே பேசியிருக்கிறேன். சமூக பொருளாதார அல்லது பாலின அநீதிகள் சமூகத்தில் பரவலாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற கல்வியை பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும். பாரபட்சமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு”  என கூறியுள்ளார்.

Source : The News Minute

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்