Aran Sei

“உள்நாட்டு பயன்பாட்டைவிட அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி”: ஐநாவில் இந்தியா தகவல்

ந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொரானா தடுப்பூசிகளைவிட அதிக எண்ணிக்கையிலான ஊசிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக, ஐநா பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், தடுப்பு மருந்துகளின் கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளை மிகவும் பாதிக்கும். இதனால், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சி தோற்கடிக்கப்படும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.

’கொரோனா தடுப்பூசிகளுக்கான உலகளாவிய அணுகல்(Access)’ குறித்த இந்தியாவின் அரசியல் பிரகடனத்திற்கு 180 ஐ.நா உறுப்பு நாடுகள் ஆதரவளித்துள்ளன.

சட்டக்கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் – குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் விடுதலை

ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்திர துணை பிரதிநிதி கே. நாகராஜ் நாயுடு, ஐநா பொதுச் சபை கூட்டத்தில், உலகெங்கும் கொரோனா தொற்று நீடித்து வரும் சூழலில், தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல தடுப்பூசிகளை அறிவியல் உலகம் அளித்திருப்பதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஒரு நேர்மறையான தொடக்கத்துடன் அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசி தயாரிப்பதற்கான சவால் தீர்க்கப்பட்டபோது, கொரோன தடுப்பூசிகளின் அணுகல் தன்மை, மலிவு விலை, சீரான விநியோகத்தை உறுதி செய்வது போன்றவற்றை நாங்கள் இப்போது எதிர்கொண்டிருக்கிறோம். உலகளாவிய ஒத்துழைப்பு இல்லாமை மற்றும் தடுப்பூசிகளை அணுகுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மிகவும் வறிய நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கும்,” அவர் கூறியுள்ளார்.

‘திரிணாமூலுக்கு வாக்களித்தால், பாஜகவிற்கு விழுகிறது’ – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க திரிணாமூல் கோரிக்கை

“உண்மையில், இன்று வரை, எங்கள் சொந்த மக்களுக்கு அளித்த  தடுப்பூசிகளைவிட, உலகநாடுகளுக்கு அதிக தடுப்பூசிகளை நாங்கள் வழங்கியுள்ளோம்,” என நாகராஜ் நாயுடு கூறியுள்ளார்.

ஐ.நா அமைதிப்படைக்கு 2,00,000 COVID-19 தடுப்பூசி டோஸ்களை பரிசாக இந்தியா அறிவித்துள்ளது. அமைதிப் படைக்கான தடுப்பு மருந்துகள் சனிக்கிழமை (மார்ச் 27) அதிகாலை மும்பையிலிருந்து புறப்பட்டு விரைவில் டென்மார்க்கில் வந்தடையும் என நாயுடு தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்