Aran Sei

“நாங்கள் பெண்கள் மீது நன்மதிப்பு வைத்திருக்கிறோம்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

நாங்கள் பெண்கள்மீது நன்மதிப்பு வைத்திருக்கிறோம், உச்ச நீதிமன்றத்தின் மரியாதை, வழக்கறிஞர்கள் கையில் உள்ளது” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது
கூறியுள்ளார்.

நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா? எனச் சர்ச்சைக்குரிய விதமாக வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான மூவர் அமர்வு குற்றம்சுமத்தப்பட்டவரை கேட்டிருந்ததற்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து உச்சநீதி மன்றம் இன்று இந்தக் கருத்தைக் கூறியுள்ளது என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவணங்களின் அடிப்படையிலேயே கேள்வி கேட்கப்பட்டது – சர்ச்சைக்குரிய கேள்விக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நாங்கள் நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று மட்டுமே கேட்டிருந்தோம் எனவும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்கவில்லையெனத் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் குற்றம்சாட்டப்பட்டவரை திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என வற்புறுத்தவில்லை என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளதாக என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை

கடந்த மார்ச் 1 அன்று பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மோஹித் சுபாஷ் சவான் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுமீதான விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேட்டிருந்தது.

இதன்படி, “நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்களா ? நாங்கள் அதற்கு உதவுவோம், இல்லையென்றால் உங்கள் வேலை பறிபோகும், நீங்கள் ஜெயிலுக்கு போக வேண்டி வரும்” என்று உச்சநீதி நீதிமன்ற தலைமை நீதிபதி குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரிடம் கூறியிருந்தார் என்றும் என்டிடிவி செய்தி கூறுகிறது.

வழக்குத் தொடுத்தப் பெண் எரித்து கொலை – பாலியல் வன்கொடுமை வழக்கில் பிணையில் வெளிவந்த நபரின் வெறிச்செயல்

இந்நிலையில் இன்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் 26 வாரக் கருவைக் கலைப்பதற்கு அனுமதி வேண்டித் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின்போது “நாங்கள் பெண்கள்மீது நன்மதிப்பு வைத்திருக்கிறோம்” என்ற கருத்தை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியிருந்தார் என்று அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ‘இதற்கு முன்பு நாங்கள் திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கு இடையிலான பாலியல் வன்கொடுமைகள் வழக்கைச் சந்தித்தது இல்லை என்றும், நீதித்துறை குறிப்பாக இந்த அமர்வு பெண்கள்மீது நன்மதிப்பு வைத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளதாக என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்டிருந்தற்கு எதிராகப் பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்