Aran Sei

‘கலவரம் செய்யும் துரியோதனனும் துச்சாதனனும் நமக்கு வேண்டாம்’ – பாஜகவை விமர்சித்த மம்தா பானர்ஜி

credits : pti

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக தலைவர்களை மகாபாரத வில்லன் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறை மீது வழக்கு பதிவு செய்த கேரள காவல்துறை: சட்டம் தன் கடமையைச் செய்யும் – பினராயி விஜயன்

புரூலியா மாவட்டத்தில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசும்போது, “மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்துக்கான நேரம் தொடங்கிவிட்டது. மே 2-ம் தேதி மம்தா விடை பெறுகிறார். இங்கு உண்மையான மாற்றம் வரவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிழக்கு மிட்னாபூரில் திரிணமூல் வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் மம்தா பேசும்போது, “பாஜகவுக்கு விடை(குட்பை) சொல்லி விடுங்கள். பாஜக நமக்கு வேண்டாம். பிரதமர் மோடியின் முகத்தை நாம் பார்க்க விரும்பவில்லை. கலவரங்களையும் கொள்ளையர்களையும் நாம் விரும்பவில்லை. துரியோதனன், துச்சாதனன் போன்றோர் நமக்கு வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

தலித் செயல்பாட்டாளர் படுகொலை: குற்றவாளிகளை காப்பாற்றும் குஜராத் அரசு – ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

முதல்வர் மம்தாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்த சுவேந்து அதிகாரி, திரிணமூல் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். நந்திகிராம் தொகுதியில் அவர் மம்தாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அவரை கண்மூடித்தனமாக தாம் நம்பியதாகவும் அவர் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் மம்தா புகார் கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, “கடந்த 2014 முதல் பாஜகவுடன் தொடர்பில் இருந்துள்ளனர். சுவேந்துவை  கண்மூடித்தனமாக நம்பியதற்காக வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

sorce: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்