Aran Sei

ஆக்சிஜன் பற்றாக்குறையில்லையென கண்ணை மூடிக்கொண்டிருக்கும் மத்திய அரசு – உயர்நீதிமன்றம் விமர்சனம்

Image Credits: India TV News

க்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து கொண்டிருக்கையில் மத்திய அரசு நெருப்புக்கோழியை போன்று மணலுக்குள் தலையை விட்டு மறைந்து கொள்ளலாம், நாங்கள் அவ்வாறு இருக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், டெல்லி மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆக்ஸிஜன் வழங்காதவர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்குக் குறைவானதல்ல – அலகாபாத் உயர்நீதிமன்றம்

டெல்லிக்கு தேவையான ஆக்சிஜன் குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகுறித்து கூறிய நிலையில், அறிக்கை குறித்து பேசிய நீதிபதிகள், “டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு ஆக்சிஜன் வழங்கப்படாததற்கு சிறிய காரணங்களைக் கூறுகிறது” என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

அதுமட்டுமல்லாது, “நீங்கள் டெல்லிக்கு 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூட ஆக்சிஜன் வழங்கவில்லை. பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் நிலையில் எவ்வாறு நீங்கள் தட்டுப்பாடு நிலவவில்லை என்று முடிவு செய்கிறீர்கள்?” என்று உயர்நீதிமன்றம் கேள்வ எழுப்பியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைக்கு எதிராக மனு – தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி, தடுப்பூசி நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மேலும், “நீங்கள் டெல்லியின் அங்கமாகத் தானே இருக்கிறீர்கள். இங்கு என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா? தெரியாது என்றால் ? நீங்கள் என்ன உச்சாணிக் கொம்பிலா வசிக்கிறீர்கள். நீங்கள் நெருப்புக்கோழியை போன்று மணலுக்குள் தலையை விட்டு மறைந்து கொள்ளலாம். நாங்கள் அவ்வாறு இருக்க முடியாது” என்று டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு மத்திய அரசைச் சாடியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் வேலை இழந்தவர்களின் பொருளாதார உதவிக்கான கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள் – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்சிஜன் சிலிண்டர் வழங்காதவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவது தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்க புதன்கிழமை நடைபெறும் (5/5/2021) விசாரணையின்போது உள்துறை மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர்கள், பியூஷ் கோயல் மற்றும் சுமிதா தவ்ரா ஆகியோர் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்