உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை உக்ரைன் இராணுவம் தாக்கும் காணொளிகளை ட்விட்டரில் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அதில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பாஜக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதையும், அவர்களது பெற்றோர்கள் அந்த காணொளிகளைப் பார்ப்பதையும் நினைத்துப் பார்க்கும் போதே என் இதயம் துடிக்கிறது. எந்தப் பெற்றோருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை உடனடியாக வெளியேற்றும் திட்டத்தை இந்திய அரசு நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் நமது சொந்த மக்களைக் கைவிட முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை உரிய நேரத்தில் வெளியேற்றவில்லை என ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை விமர்சித்து வருகின்றனர்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.