Aran Sei

‘பாஜக கொள்கையின் ஆணி வேரை அசைப்போம்’ – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி

டந்த வாரம் நான் படித்த தினேஷ் நாராயணன் எழுதிய ‘ஆர்எஸ்எஸ் – தி டீப் நேஷன்’ என்ற புத்தகம், என் சிந்தனையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் பாஜக கொள்கையின் ஆணி வேரை அசைப்போம் என்றும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ‘தி இந்து’ நாளிதழுக்கு ஹெச்.டி.குமாரசாமி நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில்,

ஆர்எஸ்எஸ் பற்றிய உங்களின் தற்போதைய கருத்துக்களுக்கு காரணம் என்ன?

இது ஒரு தற்செயலான நிகழ்வு. இதற்கும் இடைத்தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடந்த வாரம், தினேஷ் நாராயணன் எழுதிய ‘ஆர்எஸ்எஸ் – தி டீப் நேஷன்’ என்ற புத்தகத்தை படித்தேன். அது என் சிந்தனையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பொருட்டே, நான் உடனே அவ்வாறு பேசினேன். தற்போதைய ஆர்எஸ்எஸ் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மாறுபட்டது.

உங்கள் கட்சியை பாஜகவின் ‘பி டீம்’ என்று கூறப்படும் பொதுக் கருத்தை மாற்றுவதற்காகதான் என்று வைத்துக்கொள்ளலாமா?

எங்களை ‘பி டீம்’ என்று அழைக்கப்படுவது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆர்எஸ்எஸ் பற்றிய என்னுடைய கருத்துகள் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் வகையில் கூட இல்லை. ஆர்எஸ்எஸ் இந்துக்களையும், காங்கிரஸ் இஸ்லாமியர்களையும் திருப்திப்படுத்துகிறது. நம் நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகள் சிதைக்கப்படுவது பற்றி நான் அக்கறையுடன் பேசினேன். இதுகுறித்து பிரச்சினையை யாராவது எழுப்ப வேண்டியிருந்தது. அவ்வகையில், நான் பூனைக்கு மணிக்கட்டினேன். சித்தராமையா ஆர்எஸ்எஸ்ஸை தாலிபான்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். ஆனால், நான் அப்படி பேசவில்லை.

பாஜக மற்றும் அதன் அரசாங்கத்தின் மீது நீங்கள் மென்மையாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு நீங்கள் வழங்கிய உத்தரவாதம்தான் அதற்கு காரணமா?

பசவராஜ் பொம்மைக்கு அளித்த உறுதியளிப்பானது, ஆட்சியின் பலத்திற்கும் தேர்தல்களின்போதும்தான். அதற்கு, நாங்கள் பாஜக அரசை பாதுகாக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. பாஜக கொள்கையின் ஆணி வேரை அசைப்போம். எங்கள் கட்சி தொண்டர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி பட்டறை நடத்தினோம். அதில், பாஜகவின் ரகசிய வேலைத்திட்டங்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மேலும், அதை அரசியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் பயிற்சி அளித்தோம்.

Source: THE HINDU

தொடர்புடைய பதிவுகள்:

‘ராமரின் பெயரில் ஊழல்’ – தெருத் தெருவாக கொள்ளையடிப்பதாக எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு

ராமர் கோவில் நன்கொடை : ‘ஹிட்லரின் நாஜிக்கள் செய்ததை ஆர்.எஸ்.எஸும் செய்தால் நாடு என்னாகும்?’ – எச்.டி.குமாரசாமி

‘பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ்ஸின் கைப்பாவையாக செயல்படுகிறார்’ – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்