Aran Sei

கொரோனா இரண்டாவது அலை பரவல்: ‘தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம்’ – வெளியுறவுத்துறை அமைச்சகம்

credits : The Indian Express

கொரோனா நோயைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘உறங்குவதே இல்லை’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்றைய தினம், 3.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.95 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் 2,15,542 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,689 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புது தில்லியில் இருக்கும் பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் வெளியே கொரோனாவின் அவசர கால அழைப்பை ஏற்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இந்த காணொளியைப் பகிர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர் காங்கிரசின் நடவடிக்கைகளுக்கு நன்றி கூறும் அதே வேளையில், ஒரு இந்திய குடிமகனாக, வெளிநாட்டு தூதரங்களின் அவசர கால அழைப்புகளை எதிர் கட்சியின் இளைஞரணி கையாள்வதை பார்த்து நான் வியந்து போகிறேன். வெளியுறவுத்துறை அமைச்சகம் தூங்கிக் கொண்டிருக்கிறதா?” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ரமேஷை இணைத்து (Tagged) ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் “வெளியுறவுத்துறை அமைச்சகம் பிலிப்பைன்ஸ் நாட்டின் தூதரகத்தை தொடர்பு கொண்டது. அங்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகளே இல்லாத நிலையில், இது தேவையில்லாத காரியம். இது வெற்று விளம்பரத்துக்கானது. இவ்விளம்பரம் யாரால் செய்யப்படுகிறது என்பது உங்களுக்கே தெரியும். மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக தவித்து கொண்டிருக்கும் வேளையில், இது போன்று சிலிண்டர்களை வழங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்று ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

கொரோனா தொற்றால் 1400 பேர் உயிரிழப்பு – பெங்களூருவில் நிறைந்து வழியும் பிணவறைகள்

மேலும், “ஜெய்ராம் அவர்களே, வெளியுறவுத்துறை அமைச்சகம் எப்போதும் உறங்குவதே இல்லை. உலகெங்கும் இருக்கும் எங்கள் மக்களுக்கு இது தெரியும். வெளியுறவுத்துறை அமைச்சகம் எப்போதும் போலியாக இருந்ததில்லை. யார் போலியாக செயல்படுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்