Aran Sei

‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ – ஜார்கண்ட், ஒடிசா, அசாம் உள்ளிட்ட பழங்குடி மக்கள் போராட்டம்

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் திரௌபதி முர்முவின் இனத்தைச் சேர்ந்த மக்கள் “நாங்கள் இந்துக்கள் அல்ல எங்களை ’சர்னா’ என்று ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்று ஜார்கண்ட், ஒடிசா மற்றும் அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் பல்வேறு பழங்குடியின சமூகங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஒன்றிய அரசு தங்கள் மதத்தை ‘சர்னா’ என்று அங்கீகரித்து, வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது இந்த வகையின் கீழ் தங்கள் எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அக்னிபத்: இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் – பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்.

‘சர்ண தர்ம நெறிமுறை’க்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூன் 30, 1855 அன்று ஆங்கிலேயருக்கு எதிராக சந்தால் கிளர்ச்சி தொடங்கியதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜார்கண்ட், பீகார், அசாம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய 50 மாவட்டங்களில் இருந்து 250 பட்டியலின பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளைச் சேர்ந்த சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள், ஆதிவாசி செங்கல் அபியான் (பழங்குடியினர் அதிகாரமளிக்கும் பிரச்சாரம்) கீழ் தங்கள் கோரிக்கைகளை எழுப்பினர்.

“எங்கள் மதத்தை ‘சர்னா’ என்று அங்கீகரித்து,  மக்கள் தொகை கணக்கெடுப்பில் புதிய விதியைச் சேர்க்க வேண்டும்” என்று இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் ஜார்கண்டின் முக்கிய பழங்குடித் தலைவர் சல்கான் முர்மு கூறியுள்ளார்.

டெல்லி: போலீஸ் காவலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முகமது ஜூபைர் மனுத் தாக்கல்

“குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்திடம் எங்கள் உணர்வுகளை தெரிவிக்கவும், எங்கள் மதத்தை சர்னாவாக அங்கீகரிக்கவும் அவரை வலியுறுத்த விரும்பினோம். ஆனால் அவருடன் சந்திப்பு கிடைக்கவில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை காவல்துறை மூலம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

1998-2004 வரை தொடர்ந்து இரண்டு முறை ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் இருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட  பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் முர்மு கூறும்போது, “ பழங்குடியினருக்கு அவர்களின் சொந்த மதம், மத நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன. ஆனால் அது இன்னும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஆதிவாசிகளான நாங்கள் இந்துக்களோ கிறிஸ்தவர்களோ இல்லை. எமக்கென சொந்த வாழ்க்கை முறை, மதப் பழக்கவழக்கங்கள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் மதச் சிந்தனைகள் உள்ளன. இவை, மற்ற மதங்களிலிருந்து வேறுபட்டவை. நாங்கள் இயற்கையை வணங்குகிறோம், சிலைகளை அல்ல. வர்ன அமைப்பில் இருக்கும் சமத்துவமின்மைப் போல எங்கள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி! குதிரை பந்தயத்திற்கா? குதிரை பேரத்திற்கா? குழம்பிய நிர்மலா சீதாராமன் – எதிர்க்கட்சிகள் கிண்டல்

“நம் நாடு 12 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்களைக் கொண்டுள்ளது. அவர்கள் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களின் மதம் அரசியலமைப்பின் கீழ் அடிப்படையாக இருந்தாலும் கூட அங்கீகரிக்கப்படவில்லை,” என்று முர்மு கூறியுள்ளார்.

“அனைத்து பழங்குடியின மக்களும் இயற்கையை வழிபடுவதாலும், அவர்களின் மத எண்ணங்கள், நடைமுறைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் மற்ற மதங்களில் இருந்து வேறுபட்டு இருப்பதால், எங்கள் மதம் சர்னாவாக அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் முர்மு தெரிவித்துள்ளார்.

Source: ndtv

திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக எந்த எல்லைக்கும் போகும் Jenram Interview | Maharashtra News

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்