Aran Sei

‘நாம் எல்லோரும் நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்’ – கறுப்பு பூஞ்சை நோய் மருந்து பற்றாக்குறைக் குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

Image Credits: India TV News

நாம் எல்லோரும் நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்’ என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோயால் தாக்கப்பட்ட இருவர் அந்த நோய்க்கான மருந்து கேட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை உடனே இறக்குமதி செய்ய வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் வேண்டுகோள்

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், நோயாளிகளின் நிலையை உணர்வதாகவும் ஆனால் மற்ற நோயாளிகளைப் புறக்கணிக்குமாறு மனுவைத் தாக்கல் செய்த நோயாளிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்துள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவின் விசாரணையின்போது ஒன்றிய அரசு, கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்து பற்றாக்குறையை சரிசெய்ய எடுத்துவரும் முயற்சிகள்குறித்து தெரிவித்ததாகவும், மேலும், கருப்பு பூஞ்சை நோய்க்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தற்போதைய நிலை என்னவென்று உயர்நீதிமன்ற கேள்வியெழுப்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா : கொரோனாவிலிருந்து தப்பி ’கருப்பு பூஞ்சை தொற்று’க்கு பலியிலான 52 பேர்

மேலும், “நாங்கள் இந்த நரகத்தில் வாழ்கிறோம், எல்லோரும் இந்த நரகத்தில் வாழ்கிறோம்,இந்த சூழ்நிலையில் நாங்கள் உதவ விரும்புகிறோம், ஆனால் நாங்களோ உதவியற்றவர்களாக உள்ளோம் “, என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் மே 31 அன்று இந்த மனு மேற்கொண்டு விசாரிக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்