Aran Sei

வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் – பிபிசி நிறுவனம் ட்வீட்

டெல்லியில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்து சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் மோடி குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டது. இதையடுத்து, அந்த ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்து. இந்தத் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி: பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை

மேலும் அண்மையில், இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து சேனா அமைப்பின் தலைவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் பிபிசி அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், பிபிசி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “வருமான வரித்துறை நடத்தி வரும் சோதனைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிவருகிறோம். இந்நிலைமை விரைவில் சரி செய்யப்படும், பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை உள்ளது என பதிவிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்